“அஷ்வின் அந்த போட்டியில் இருந்தால் கூட எதையும் செய்து இருக்க முடியாது” – முத்தையா முரளிதரன்.
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த உலக கோப்பை 2023 இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில்இந்திய அணி தோல்வி தழுவியது. இந்திய இந்த உலகக் கோப்பை முழுவதும் பலம் வாய்ந்த அணியாக விளையாடியது லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதிப்போட்டி என அனைத்திலும் வெற்றி
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த உலக கோப்பை 2023 இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில்இந்திய அணி தோல்வி தழுவியது. இந்திய இந்த உலகக் கோப்பை முழுவதும் பலம் வாய்ந்த அணியாக விளையாடியது லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதிப்போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வரை சென்றது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி எதிர்பார்க்காத விதமாக ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவியது.
இறுதிப்போட்டி வரை இந்திய அணி செல்ல காரணமே இந்தியாவில் போட்டியில் நடைபெறுவது என்பதால் மைதானத்தின் ஆடுகளத்தை இந்திய அணி சாதகமாக பயன்படுத்திக் கொண்டது என்று பல கிரிக்கெட் வீரர்கள் குற்றம்சாற்றியுள்ளார்.அந்தப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். இரண்டாம் பாதியில் பனி வரும் காரணத்தினால் முதலில் பௌலிங் செய்கிறோம் என்று அவர் கூறியிருந்தார்.
அதற்கு ஏற்றார் போல் ஆடுகளம் உலர்ந்த நிலையில் அவர்களுக்கு பந்து வீசுவதற்கு சாதகமாக அமைந்தது அதன் பின்பு இந்திய அணி பந்து பந்து வீச்சு இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை. எனவே இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் தோல்வியை தழுவியது. அந்த ஆடுகளத்தை மைதானத்தில் பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லாத காரணத்தினால் முதல் பாதியில் பேட்டிங் செய்ய கடினமாகவும் இரண்டாம் பாதியில் பனி வந்ததால் அவர்களுக்கு பேட்டிங் செய்ய எளிதாகவும் மாறியது என்றும் சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அதுக்குறித்து இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறுகையில் 2011ஆம் ஆண்டு உலக கோப்பையிலும் நாங்கள் இவ்வாறு தான் இருந்தோம். குமார் சங்ககரா முதலில் பேட்டிங் செய்ய விரும்பினார். நாங்கள் முதல் பாதியில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்து நல்ல இலக்கை நாம் பெற்றிருந்தோம். அதேபோல் இந்திய அணியின் 2 விக்கெட்டுகளை ஆரம்பத்தில் கைப்பற்றிய இருந்தோம்.
பணி வருவதற்கு பின் எங்களால் அழுத்தத்தை ஏற்பட்ட முடியவில்லை. அதன் பின்பு போட்டி எனது ஒரு தலைபட்சமாக மாறி அதிலிருந்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் கம்பீரும் தோனியும் சிறப்பாக விளையாடி இருந்தார்கள். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தாலும் அவரால் அணியை வெற்றி பெற வைத்திருக்க முடியாது. பணிவந்த காரணத்தினால் பந்து திரும்பாமல் நேராக சென்றது.
பேட்ஸ்மேன்களுக்கு இது விளையாடுவது மிகவும் எளிதான விஷயம். 2011 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தேதி நான் இதை அனுபவித்தேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில்ரோஹித் ஷர்மா 130 ஸ்ரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார். இது t20யில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் ஆகும். 36 வயதிலும் ரோஹித் ஷர்மா தகுதியுடன் நான்கு வைத்து உழைக்க வேண்டும் அப்படி செய்வதாக இருந்தால் அவர் அடுத்த உலக கோப்பையில் கூட அவருக்கு விளையாட தகுதி உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.