இப்படி செய்தால் எப்படி ரசிகர்கள் மைதானத்திற்கு வருவார்கள் – PCB நிர்வாகத்தை விமர்சித்த முரளிதரன்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆசிய கோப்பை மீது பலரும் விமர்சனங்களை குறி வருகின்றனர். சொல்லப்போனால் இந்த போட்டி தொடங்ககுவதற்கு முன்னரே பல பிரச்னைகள் இருந்தது. ஆசிய கோப்பை 2023 தொடரை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் அணியிடம் இருந்தது. ஆனால் இந்திய அணியானது பாதுகாப்பு காரணங்கள் காரணமா
தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆசிய கோப்பை மீது பலரும் விமர்சனங்களை குறி வருகின்றனர். சொல்லப்போனால் இந்த போட்டி தொடங்ககுவதற்கு முன்னரே பல பிரச்னைகள் இருந்தது. ஆசிய கோப்பை 2023 தொடரை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் அணியிடம் இருந்தது. ஆனால் இந்திய அணியானது பாதுகாப்பு காரணங்கள் காரணமாக பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று விளையாடுவதற்கு மறுப்பு கூறியது.
இதனால் இரண்டு நிர்வாகங்களுக்கு இடையே பேச்சு வரத்தை நடந்த நிலையில் முடிவாக ஆசிய கோப்பை 2023 தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரண்டு நாடுகளில் நடத்துவது என முடிவு செய்தனர். ஆனால் இதோடு சர்ச்சை முடிந்து விட்டாதா என்றால் இல்லை. சொல்லப்போனால் ஆசிய கோப்பை 2023 தொடரில் பல போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டது.
மேலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லீக் சுற்றில் நடந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் ஒரு இன்னிங் நடக்காமலேயே போனது. இதனால் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டது. மேலும் பல வணிக நிர்வானங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன்.
இந்த ஆண்டு ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துவதால் நடத்துவதால், இந்த டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். தற்போது இலங்கை நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. டிக்கெட் விலை திடீரென குறைக்கப்பட்டாலும், அந்த வகையில் நிலைமை மாறவில்லை. டிக்கெட்டுகளுக்கான விலைகள் 6000 இலங்கை ரூபாய் மற்றும் அதற்கு மேல் இருக்கும்.
மைத்தனத்தில் இருந்து விளையாட்டைப் பார்க்க 40,000 முதல் 50,000 இலங்கை ரூபாய் வரை செலவாகும். இது ஒரு மாத வருமானம். இலங்கையில் எவருக்கும் இவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. வானிலை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் தோல்வியின்றி முடிந்தது.
மழை முன்னறிவிப்பு மக்களை ஒரு வாய்ப்பைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தியிருக்கலாம், மேலும் சுப்பர் 4 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு மாற்றப்பட்டது குழப்பத்தை அதிகரித்தது. இப்படிப்படியான சூழ்நிலைகளில் மக்கள் முன் வந்து டிக்கெட் வாங்க விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முதய்யா முரளிதரன்.