2009 ஆண்டிலிருந்து எனக்கு எல்லாமே தோனிதான் – ஜடேஜாவின் நெகிழ்ச்சியான ட்விட் பதிவு.

ஐபிஎல் 2023 தொடரின் குவாலிபைர் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி பைனலுக்கு சென்றது. சொல்லப்போனால் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ஜடேஜா தான், கடைசி நேரத்தில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசி வெற்றியை தேடிக்கொடுத்தார். ஆனால் கடந்த சீசனில் சென்னை அணிக்கு ஜ

By ·

ஐபிஎல் 2023 தொடரின் குவாலிபைர் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி பைனலுக்கு சென்றது. சொல்லப்போனால் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ஜடேஜா தான், கடைசி நேரத்தில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசி வெற்றியை தேடிக்கொடுத்தார். ஆனால் கடந்த சீசனில் சென்னை அணிக்கு ஜடேஜா கேப்டனாக இருந்த நிலையில் மோசனான சில தோல்விகளை கடந்து மீண்டும் தோனி கேப்டனானர்.

இதன் போது ஜடேஜா அணியில் இருந்து விளக்கியிருந்தார். இதனால் அணியின் நிர்வாகத்திற்கும் தோனிக்கும் எதோ பிரச்னை என்று செய்திகள் பரவின. அதோடு ஜடேஜாவின் செயலும் அப்படிதான் இருந்த்து. இதனையடுத்து இந்த சீசனில் ஜடேஜா விளையாடும் போது தோனியை கணவதற்காக ஜடேஜா ஆட்டமிழக்க வேண்டும் என்ற பதாகைகளை ரசிகர்கள் ஏந்தி வந்தனர். இதற்கு ஜடேஜாவும் பேட்டியிலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் சில பதிவுகள் மூலம் அதிர்ப்தி தெரிவித்திருந்தார்.

தோனி – ஜடேஜா சர்ச்சை :

மேலும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னர் கூட டெல்லியுடன் விளையாடும் போது தோனிக்கு ஜடேஜாவிற்கு ஏதே பிரச்னை இருப்பதாக சில விடியோக்கள் வெளியாகின. அதோடு சென்னை அணியின் CEOவும் அந்த போட்டியின் போது ஜடேஜாவுடன் பேசினார். இதனால் ஏதே பிரச்னை சென்னை அணிக்கும் ஜடேஜாவிற்கும் இடையே இருக்கிறது என்று கூறிவந்த நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய CEO காசி விசுவநாதன் ஜடேஜாவுக்கும் தோனிக்கு எந்த பிடசனையும் கிடையாது என்ற தகவலை குறி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

தோனி பிறந்தநாள் :

இதனிடையே இன்று ஜூலை 7ஆம் தேதி மஹேந்திர சிங் தோனி தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தோனிக்கு காலையில் இருந்தே ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரிடம் இருந்து வாழ்த்துக் வந்த நிலையில் #happybirthdayMSDHONI என்ற ஹாஸ்டாக் டிவிட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் தான் ஜடேஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தோனியின் பிறந்தநாள் அன்று உருக்கமான ஒரு பதிவை இட்டுள்ளார்.

ஜடேஜா ட்விட் :

அந்த பதவியில் தோனி ஜடேஜாவை தூக்கியது போன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதில் “2009ஆம் ஆண்டிலிருந்து எல்லாமே எனக்கு தோனிதான். அப்போதிலிருந்து இப்போது மட்டுமல்ல எப்போதுமே அவர் தான், பிறந்த நாள் வாழ்த்துக்கள் மஹி பாய், விரைவில் மஞ்சள் ஜெர்சியில் சிந்திப்போம் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.

ஜடேஜா பற்றிய தகவல் :

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஜடேஜா முதன் முறையாக இந்திய அணிகாக்க களமிறங்கினார். அப்போதே ஜடேஜாவுடம் இருக்கும் திறமையை அறிந்து கொண்ட தோனி அவரை 2012ஆம் ஆண்டு சென்னை அணியில் இணைத்தார். அன்று முதல் இன்று அவரையில் ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் இந்த சீசனில் தோனியின் கண்களிலேயே கண்ணீர் வரும் அளவுக்கு ஜடேஜா கோப்பையை வென்று கொடுத்தது அனைவருக்கும் நெகிழ்ச்சி தரும் தருணமாக இருந்தது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை