பாபர் அசாமிற்கு தைரியம் இருக்கா? என்னோட இதயம் வலிக்குது – சோயப் அக்தர் கவலை பேச்சு.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று நடந்த பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்வது அவர்களுக்கு சாதக

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று நடந்த பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்வது அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது.நீண்ட நாட்களாக தடுமாறி வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் இந்த போட்டியில் அவருடைய சிறப்பான பேட்டிங்கின் மூலம் 50 ஓவர்களில் 282 ரன்களை குவித்தது.

283 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். மேலும் பாகிஸ்தான் அணியின் பலமான பந்துவீச்சை ஆப்கானிஸ்தான் சுலபமான எதிர்கொள்ள 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவரிலே மாபெரும் வெற்றியை அடைந்தது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னரே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் வருகின்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 300க்கும் அதிகமான ரன்களை அடிக்க வேண்டும் என்று அப்போதுதான் சரியாக இருக்கும் என்றிருந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சொதப்பியது. இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு பேசிய சோயப் அக்தர் கவலையாக பேசியிருந்தார்.

அவர் கூறுகையில் “நான் பாகிஸ்தானுக்காக விளையாடி இருக்கிறேன். என் இதயத்தில் இரத்தம் வருகிறது. நான் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன். நான் இப்போது பாபருடன் இருந்திரந்தால் அவரை கேப்டனாக உயர்த்தச் சொல்லியிருப்பேன். இது மிக மோசமானது, இது நடந்த நிலையில் நாங்கள் இப்போது நான்கு அணிகளுடன் விளையாடுகிறோம், அந்த அனைத்து விளையாட்டுகளையும் வெல்ல வேண்டும்.

பாபர் அசாம் எனது வீடியோக்களைப் பார்க்கிறார் என்றால், சிஸ்டம் சீர்குலைந்துள்ளது, அதை விடுங்கள். சரியான நபர்களை விளையாடுங்கள். ஃபக்கரை மீண்டும் அழைத்து வந்து, தாக்குவதற்கான நம்பிக்கை கொடுங்கள். ஜமானைக் கொண்டு வாருங்கள், மற்ற விருப்பங்களைத் தேடுங்கள். ஆக்ரோஷமாக விளையாடுங்கள். பாபரும் 120 ஸ்டிரைக் ரேட்டுடன் பேட் செய்ய வேண்டும்.

பாகிஸ்தான் 80 மற்றும் 90 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பேட்டிங் செய்கிறது. ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் 122 ரன்களில் விளையாடினார். பாகிஸ்தான் ஒவ்வொரு போட்டியிலும் 150 டாட் பால்களை விளையாடுகிறது. பந்துகளை எதிர்கொள்ள நாங்கள் பயப்படுகிறோம்

பாபர் அசாமிற்கு சகிப்பு தன்மையும், திறமையும் இருக்கிறதா? அவரால் இம்ரான் கான் போல செயல்பட முடியுமா? வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், இம்ரான் கான், ஸ்டீவ் வாக், ஆலன் பார்டர் மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் போன்றவர்களை நான் பார்த்திருக்கிறேன். தற்போது உள்ள பாகிஸ்தான் அணியில் வீரர்களில் அவர்களை ஆவார்கள்? எங்களின் வீடியோக்களை மக்கள் ஏன் இன்னும் பார்க்கிறார்கள்? நாங்கள் தலைமுறையை ஊக்குவிக்கிறோம் என்று கூறினார் சோயப் அக்தர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை