கோலியுடனும், தோனியுடனும் சண்டை போட்டது இந்த காரணத்தினால் தான் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கம்பீர்.
சமீபத்தில் ஐபிஎல் 2023 போட்டியானது நடந்து முடிந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தாலும் பல விதமான சம்பவங்களும் நடந்தது. குறிப்பாக விராட் கோலி மற்றும் கம்பீருக்கு இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அது ஐபிஎல் முடிந்தும் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப
சமீபத்தில் ஐபிஎல் 2023 போட்டியானது நடந்து முடிந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தாலும் பல விதமான சம்பவங்களும் நடந்தது. குறிப்பாக விராட் கோலி மற்றும் கம்பீருக்கு இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அது ஐபிஎல் முடிந்தும் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் அந்த நிகழ்வு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் கவுதம் கம்பீர்.
கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் ஆர்சிபி அணி இடையே போட்டி நடந்த போது ஆப்கானிஸ்தான் வீரர் கம்பீருக்கும் விராட் கோலிக்கும் இடையே சில வாக்குவாதம் நடந்தது.அந்த வாக்குவாதத்தில் கம்பீர் தலையிட்டு முடிவு வைக்க முயற்சி செய்தார். ஆனால் அது பெரும் பிரச்னையாக மாறி விராட் கோலிக்கும் கமீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பலவிதமான தகராறுகள் உருவானது.
மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி, நவீன் உல் ஹக், கமீர் ஆகியோருக்கும் அபராதமும் விதித்தது ஐபிஎல் நிர்வாகம். அப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்த கவுதம் கம்பீர் அன்று நடந்த சண்டை குறித்தும், தோனி மற்றும் விராட் கோலியின் மீதியுள்ள மதிப்பு குறித்தும் பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு.
கம்பீர் கூறியது :
கிரிக்கெட் மைதானத்தில் எனக்கு நிறைய சண்டைகள் உள்ளன, நான் எப்போதும் அவற்றை கிரிக்கெட் மைதானத்திற்குள் மட்டுமே வைத்துக்கொள்கிறேன். நிறைய பேர் நிறைய விஷயங்கள் சொல்லி டிஆர்பிக்காக பேட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த விஷியத்தை நான் சொல்லித்தான் தெரிவியவேண்டும் என்று தேவையில்லை. கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு நபர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம்.
இது வெளியில் நடந்திருந்தால், நீங்கள் அதை சண்டை என்று கூறலாம். இது இரண்டு அணிகளிடைய நபர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம். இந்த விஷியத்தை நான் பெரிதாக்க விரும்பவில்லை. அந்த போட்டியில் முற்றிலும் சரியாக இருந்த ஒரு நபருக்கு நான் துணைநின்றேன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நவீன் உல்-ஹக் எந்த தவறும் செய்யவில்லை என்று நான் உணர்ந்தால், அவருடன் நிற்பது எனது பொறுப்பு. எனது சக வீரர் தவறு செய்தால், நான் அவருடன் ஒருபோதும் நிற்க மாட்டேன் என்றார் கம்பீர்.
மேலும் MS தோனி மற்றும் விராட் கோலியுடன் விவாதம் குறித்து பேசிய கம்பீர் “எம்எஸ் தோனியுடன் பழகுவது போலத்தான் விராட் கோலிலுடனும் என்னுடைய பழக்கம் இருக்கிறது. விராட் அல்லது தோனியுடன் எனது சண்டை தனிப்பட்டது கிடையாது. அது போட்டியைப் பற்றியது. அவர்களும் அணி வெற்றி பெற விரும்புகிறார்கள். அது களத்தில் இருக்க வேண்டும். நான் இந்தியாவுக்காக விளையாடிய ஒவ்வொரு வீரரையும் மதிக்கிறேன் என்று கூறினார் கம்பீர்.