சாதனைக்காக விளையாடினால் இப்படித்தான் – விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும்
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் முதலில் இதே ஆதிக்கம் செழித்தி வந்தது இந்திய அணி.
அதன் காரணமாக இந்தியா முதல் ஆளாக ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதி போட்டிக்கு சென்றது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மாபெரும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணி அடுத்தாக உலக கோப்பை தொடரிலும் விளையாட இருக்கிறது. இதனால் சொந்த மண்ணில் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.
ஏனென்றால் கடந்த தோனி தலைமயிலான இந்திய அணி கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் ட்ராபியில் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியால் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. நாடவுட் போட்டிகளுக்கு முன்னதாக சாதாரண இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை தெறிக்க விடும் இந்தியா முக்கியமான ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஏதோ ஒரு வகையில் சொதப்பி 10 வருடங்களாக வெறும் கையுடன் வெளியேறி வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் சாதனைகளுக்காகவும் விமர்சனங்களுக்கு பயந்து விளையாடுவதாக விமர்சித்துள்ளார் முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல். அவர் கூறுகையில் “இந்திய அணியானது சாதனைகளை பின்பற்றிய கிரிக்கெட்டை அதிக விளையாடுகின்றனர். அவர்கள் சாதனைக்காக அதிகமாக அக்கறை கொடுக்கிறார்கள். அதுவே அவர்களுடைய பேட்டிங்கில் இருக்கும் கவலைக்குரிய அம்சம் என்று நான் கருதுகிறேன்.
ஏனெனில் அவர்களிடம் திறமையான உலகத்தரம் வாய்ந்திருக்கின்றனர். ஆனாலும் பெரிய தொடரின் முக்கிய நேரத்தில் பயமற்ற கிரிக்கெட்டை விளையாடுவதே அவர்களுக்கு கடந்த சில உலகக் கோப்பையில் தலைகுனிவை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் தங்களுடைய இடத்தைப் பற்றி செய்தித்தாள்களில் என்ன அச்சடிக்கப்படும் என்பதை நினைத்து பயப்படுவதால் ரிஸ்க் எடுத்து விளையாடுவதில்லை என்று கூறினார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய நாசர் ஹுசைன் கூறுகையில் “நாக் அவுட் போட்டிகளில் அவர்கள் பயமற்ற கிரிக்கெட்டின் கிரிக்கெட்டின் எல்லைக்கு சற்று குறைவாகவே விளையாடுகின்றனர். அவர்களுடைய அணியில் விராட் ரோஹித் போன்ற மகத்தான வீரர்கள் இருக்கின்றனர். அதில் ரோகித் சர்மா 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள நிலையில் விராட் கோலி கடினமான சூழ்நிலையில் சேசிங் செய்யக்கூடிய திறமை கொண்டிருக்கிறார்”மேலும் கில் போன்ற வீரர்களுடன் பும்ரா வந்துள்ளது போனஸாகும் என்று விமர்சித்துள்ளார்.