அவர் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய இழப்புதான் – இந்திய வீரர் குறித்து கருத்து தெரிவித்த நாசர் ஹுசைன்
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடரானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்தியா வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறது. இருந்த போதிலும் இந்திய அணியில் உலக கோப்பை போ
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடரானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்தியா வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறது. இருந்த போதிலும் இந்திய அணியில் உலக கோப்பை போட்டியில் சில வீரர்களின் தேர்வு என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெரும் தோல்வியை தழுவியது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா போன்ற வீரர்கள் இல்லாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் வரும் உலகே கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு யார் 4,5 இடங்களில் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்ததுள்ளது. மேலும் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவதும் கொஞ்சம் கடினம், என்று குறைப்படுகிறது.
இந்த நிலையில் தான் இங்கிலந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹுசைன் ரிஷப் பண்ட் குறித்தும், ஹர்திக் பாண்டியா குறித்தும் பேசியுள்ளார். அவர் கூறுகையில் கூறுகையில் நான் ரிக்கி பாண்டிங்குடன் ஆஷஸ் தொடரின் போது நிறையவே நேரத்தை செலவிட்டேன். அப்போது நானும் அவரும் நிறைய விஷயங்களை பேசிக்கொண்டோம். அந்த சமயத்தில் ஒருமுறை ரிக்கி பாண்டிங் ரிஷப் பண்ட்க்கு தனது மொபைல் போன் மூலம் மெசேஜ் அனுப்பி எங்கே இருக்கிறீர்கள்? உடல் நலன் குறித்தும் கேட்டறிந்தார்.
அதற்கு பதிலளித்த ரிஷப் பண்ட் தான் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், காயத்திலிருந்து தான் மெல்ல மெல்ல முன்னேறி வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்திய அணியை பொருத்தவரை ரிஷப் பண்டின் இடம் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் பூர்த்தி செய்யப்பட முடியாத ஒன்று என நான் நினைக்கிறன். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் வெளிநாட்டு மைதாங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட கூடியவர்.
எனவே ரிஷப் பண்ட் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய இழப்பு என்றுதான் எனக்கு தோன்றுகிறது. அதேபோன்று இந்திய அணியில் பேட்டிங் தெரிந்த ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இருக்க வேண்டும். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். அதே போல ஆஸ்திரேலியா அணிக்கு மிட்சல் மார்ஷ் மற்றும்கேமரூன் க்ரீன் போன்றவர்கள் இருப்பதை போல இந்தியாவிற்கு ஹார்டிக் பாண்டியாவால் அந்த இடத்தை பூர்த்தி செய்ய முடியும்.
அவர் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். எனவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தலாம் என்றும் நாசர் ஹுசேன் கூறியிருந்தார். கடந்த ஆண்டு வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ரிஷப் பண்ட் அதன்பிறகு நாடு திரும்பிய வேளையில் புத்தாண்டு பிறக்கும் போது கார் விபத்தில் சிக்கி காயமடைந்து கடந்த எட்டு மாதங்களாக ஓய்வில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.