இந்தியாவ அடிச்சு நொறுக்கி நீங்க யாருனு காட்டுங்க – இங்கிலந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் அதிரடி.
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசிய கட்டத்தை எட்டியுள்ளது. அணைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் வருவதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். இருட்னஹா போதிலும் பல அணிகள் ஏற்கனவே 5 போட்டிகளை ஆடியுள்ள நிலையில் கிட்டத்தட்ட சில அணிகள் அரையிறுதி போட்டிக்கு செல்லவும் வாய்ப
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசிய கட்டத்தை எட்டியுள்ளது. அணைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் வருவதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். இருட்னஹா போதிலும் பல அணிகள் ஏற்கனவே 5 போட்டிகளை ஆடியுள்ள நிலையில் கிட்டத்தட்ட சில அணிகள் அரையிறுதி போட்டிக்கு செல்லவும் வாய்ப்பை பெற்றுவிட்டனர். அதில் இந்திய அணி ஏற்கனவே நடந்த 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது
மேலும் அதற்கு அடுத்த படியாக பலமான அணிகளாக தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் இறுகின்றனர். மேலும் தொடந்து சில தோல்விகளை தழுவிய பாகிஸ்தான், இங்கிலாந்து, நெதர்லாந்து, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகள் கொஞ்சம் மோசமான கட்டத்தில் இறுகின்றனர். இதனால் வரும் போட்டிகளை அவர்கள் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருகின்றனர்.
இதில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது நடப்பு சாம்பியன் அணியானது இங்கிலந்து அணி தான் ஏனென்றால் இங்கிலாந்து 5 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மட்டுமே பெற்று 9வது இடத்தில் இருந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. இந்நிலையில் நாளை இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த இந்திய அணியுடன் மோத இருக்கும் நிலையில் முன்னாள் இங்கிலந்து வீரர் நாசர் ஹுசைன் இங்கிலாந்து அணிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அவர் பேசுகையில் “இந்த தோல்விக்கு இங்கிலாந்து வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும். இருந்த போதிலும் தற்போது இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாட வேண்டும். குறிப்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை லக்னோவுக்கு சென்று அங்கே இந்தியாவின் பார்ட்டியை கெடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் எந்தளவுக்கு சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்தியாவுக்கும் இந்த உலகிற்கும் நினைவூட்டுங்கள்”
அதுமட்மல்லாமல் தற்போது இந்த தோல்விக்கு இங்கிலாந்தினர் 50 ஓவர் போட்டிகளில் அதிகமாக விளையாடாமல் ஹண்டர்ட் அல்லது டி20 ப்ளாஸ்ட் போன்ற தொடர்களில் அதிகமாக விளையாடுவதே காரணம் என்ற விமர்சனங்கள் நமது நாட்டில் காணப்படுகின்றன. ஆனால் அதெல்லாம் வெறும் சுமாரான சாக்காகும் என்று கூறியுள்ளார் நாசர் ஹுசைன்.