WTC பைனலில் இந்தியா அன்று செய்த தவறை செய்யாமல் இருந்தாலே வெற்றி பெறலாம் – நாசர் ஹுசைன்

இந்தியாவில் ஐபிஎல் முடிந்த கொண்டிருந்ததால் இந்திய அணி மூன்று பேட்ச்களாக லண்டனை அடைந்து வெளிநாட்டு சூழல்களுக்கு பழகுவதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டது. இன்று ஜூன் 7-ம் தேதி ஓவலில் இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்

By ·

இந்தியாவில் ஐபிஎல் முடிந்த கொண்டிருந்ததால் இந்திய அணி மூன்று பேட்ச்களாக லண்டனை அடைந்து வெளிநாட்டு சூழல்களுக்கு பழகுவதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டது. இன்று ஜூன் 7-ம் தேதி ஓவலில் இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. இந்தியாவின் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷமி, புஜாரா போன்ற வீரர்கள் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகின்றனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த WTC இறுதி போட்டியில் சில தவறுகளை செய்ததால் வெற்றி பெற முடியாமல் போனது. மேலும் கடத்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்துயா சிறப்பான செயல்பாட்டை காட்டி வருகிறது. குறிப்பாக ஆத்திரேலியாவை 2019 முதல் 2021 வரையில் நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணிலேயே வீழ்த்திய அணி என்ற பெருமையை பெற்றது.

அப்படிப்பட்ட நிலையில் தான் கவாஸ்கர் ட்ராபியை வெற்ற நம்பிக்கையுடன் இந்திய அணி WTC உலக சாம்பியன் ஷிப் இறுதி போட்டிக்கு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சாம்பியன் ஷிப் போட்டியில் நிசிலாந்து அணியிடம் சில தவறுகளை செய்து தோல்வியை சந்தித்து போல செய்ய கூடாது என்பதே பல கிரிக்கெட் வலனுணர்களின் கருத்தாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் தான் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா கிரிக்கெட் அணி உலகின் எந்த சூழ்நிலைகளிலும் தங்களால் வெல்ல முடியும் என்பதை ஆஸ்திரேலியாவில் காட்டினார்கள். குறிப்பாக ஓவல் மைத்தனத்தில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை அவர்களது மண்ணிலேயே வீழ்த்தினர்கள். எனவே இது ஆஸ்திரேலியாவிற்கு பந்தியாவிற்கு சமமான போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஓவல் மைதானத்தில் சூரிய வெளிச்சம் இருந்தால் அவர்கள் 2 ஸ்பின்னர்களையும் மற்றும் ஷார்துல் தாக்கூரை 3வது வேகப்பந்து வீச்சாளராகவும் பயன்படுத்தலாம்.

ஆனால் கடந்த ஃபைனலில் சூழ்நிலையை புரிந்து கொல்லாமல் ஸ்பின்னரை பயன்படுத்தியது. ஆனால் நியூசிலாந்து அணி ஸ்பின்னரை பயன்படுத்தவில்லை. ஆனால் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. இந்த முறை நானாக இருந்தால் வானிலையை பொறுத்து ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரையும் தேர்வு செய்வேன்.

குறிப்பாக இங்கிலாந்தில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் ஜடேஜா மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் வானிலை மேகமூட்டத்துடன் கூடிய மழைக்கான சூழ்நிலை நிலவினால் கடந்த ஃபைனலில் செய்த தவறை அவர்கள் மீண்டும் செய்யக்கூடாது. எனவே நானாக இருந்தால் போட்டி துவங்கும் நாளன்று வானிலையை பார்த்து விட்டு அணியை தேர்வு செய்வேன். ஆனால் நல்ல பவுலர்கள் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரியாக விளையாடுவார்கள் என்று கூறினார் நாசர் ஹுசைன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை