இங்கிலாந்து வந்து இறங்கியதும் இந்திய அணியில் இருந்து வந்த செய்தி – மகிழ்ச்சியில் இந்திய வீரர்.
இந்திய அணியில் பல வீரர்கள் விளையாடி இருக்கும் சிலர் மட்டுமே இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுகின்றனர். அவர்களின் பேட்ஸ்மேன்களை விடவும் பந்துவீச்சாளர்கள் அதிகமாக மாற்றப்படுவார்கள். அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச
இந்திய அணியில் பல வீரர்கள் விளையாடி இருக்கும் சிலர் மட்டுமே இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுகின்றனர். அவர்களின் பேட்ஸ்மேன்களை விடவும் பந்துவீச்சாளர்கள் அதிகமாக மாற்றப்படுவார்கள். அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்தான் நவதீப் ஷைனி. கடந்த 2021அம ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய போட்டியில் நவதீப் ஷைனி காயத்துடன் விளையாடினார்.
ஆனால் அதற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டதினால் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் நடந்து முடிந்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டார். அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறியபோது “நான் இங்கே உள்ளூர் கிரிக்கெட் விளையாடுவதற்காக வந்தேன். விமான நிலையத்தில் வந்து இறங்கிய பின்னர் தான் நான் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் என்னுடைய பெயரும் இடம் பெற்றிருக்கிறது என்று. உண்மையில் இந்தனை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது நன் அதிகமாக டியூக் பந்துகளை வைத்து பயிற்சி செய்து வந்தேன்.
அதற்கு காரணம் நான் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வருவேன் என்ற எண்ணத்தில் அப்படி செய்தேன். நல்ல வேலையாக நான் வேஸ்ட் இண்டீன்ஸ் தொடருக்கு செல்வதற்கு முன்னர் ஒரு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட எனக்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் என்னால் அந்த தொடருக்கு சரியாக தயாரான நல்ல பயிற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விரைவாக அடிபட்டு விடும், ஆனால் ஒரு நல்ல வியஹ்யம் என்னவென்றால் எனக்கு தற்போது காயம் ஏற்படுவது இல்லை. கடந்த காலங்களில் தொடர்ந்து காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தேன் அதனால் முகுந்த ஏமாற்றம் அடித்தேன். காயம் ஏற்படுத்திவது நம்முடைய கைகளில் கிடையாது. எனவே நான் அதனை புரிந்து கொண்டு பந்துவீசுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.
நான் அதிர்ஷ்டவசமாக எப்போதுமே இந்திய அணியுடன் வலைப்பந்து வீச்சாளராகவும் அல்லது அணிவீராகவும் பயணம் செய்து வருகிறேன். இந்திய அணியின் நிர்வாகமும் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு தோடர்ந்து வாய்ப்புகளை கொடுக்கிறார்கள். நான் ஏற்கனேவே வெஸ்ட் இண்டீஸ்க்கு சென்று இருக்கிறேன். அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை , இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு அங்குள்ள பிட்சுகளின் தன்மை பற்றி தெரியும் என்றார் நவதீப் ஷைனி.