விராட் கோலியை சீண்டுகிறாரா நவீன்? இன்ஸ்டா ஸ்டோரியால் ரசிகர்கள் குழப்பம்.

ஐபிஎல் 2023தொடரில் கடந்த மே 1 ஆம் தேதி ஆர்சிபிக்கு எதிராக லக்னோ அணி போட்டியிட்டது. இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றிருந்தாலும் அதிகம் பேசப்படுவது நாவின், விராட், கம்பீர் சண்டை தான். அந்த நிகழ்வு நடந்து பல நாட்கள் ஆகியும் அந்த பிரச்னை முடியும் படியாக இல்லை. அப்படிப்பட்ட நிலையி

By ·

ஐபிஎல் 2023தொடரில் கடந்த மே 1 ஆம் தேதி ஆர்சிபிக்கு எதிராக லக்னோ அணி போட்டியிட்டது. இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றிருந்தாலும் அதிகம் பேசப்படுவது நாவின், விராட், கம்பீர் சண்டை தான். அந்த நிகழ்வு நடந்து பல நாட்கள் ஆகியும் அந்த பிரச்னை முடியும் படியாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில் தான் விராட் கோலியுடன் விவாதத்தில் ஈடுபட்ட நவீன் உல் ஹக் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது நேற்று மும்பை மற்றும் பெங்களூரு அணிக்கு இடையேயான ஐபிஎல் 54வது போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்தது. இதன் படி முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. இது போதுமானது என்று தான் அனைவரும் நினைத்தார்கள்.

இதனையடுத்து 200 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்திலே அதிரடி பாணியை விட வில்லை. மும்பை அணியின் அணைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பான விளையாட்டை விளையாடி 200 ரன்கள் என்ற இமாலய இலக்கை 16.3  ஓவர்களிலே எட்டி வெற்றி பெற்றனர்.  இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் 3 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நவீன் உல் ஹக் பதிவு :

இந்நிலையில் தான் மும்பைக்கு எதிராக பெங்களூரு அணி விளையாடுகையில் விராட் கோலி 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தான் நவீன் உல் ஹக் தன்னுடை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில் பியூஸ் சாவ்லா இருக்கிறார் அதோடு அதில் சுவையான மாம்பழம் என்று பதிவிருக்கிறார்.

அதற்கு மும்பை vs பெங்களூரு போட்டியில் போட்டி முடியும் நேரத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இரண்டாவது சுற்று இந்த மாம்பழங்களுடைய. இவை நான் சாப்பிடத்திலேயே மிகவும் சுவையானவை என்று பதிவிட்டிடிருந்தார். அந்த பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை