அவங்க கொடுத்த பணத்திற்கு பாட் கம்மின்ஸ் செஞ்சது இதுதான் – முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கருத்து.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. சொல்லப்போனால் இந்த தொடர் முழுவதுமே கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இறுதி போட்டியானது சென்னை மைதானத்தில் நடந்தநால் கொல்கத்த
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. சொல்லப்போனால் இந்த தொடர் முழுவதுமே கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இறுதி போட்டியானது சென்னை மைதானத்தில் நடந்தநால் கொல்கத்தா அணிக்கு சாதகமாக சென்றது.
ஆனால் இந்த ஐபிஎல் தொடக்கத்தில் இந்த மாதிரியான ஒரு முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. சொல்லப்போனால் ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே அற்பதமாக விளையாடி கொண்டிருந்த்து. மேலும் ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரையும் அடித்து நம்பமுடியாத ஒரு அணியாக இருந்தது. இதனால் இந்த வருடம் கண்டிப்பாக ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று நினைத்தார்கள்.
ஆனால் துரிதிஸ்டவசமாக ஹைதராபாத் அணி இறுதி போய்ட்டியில் தோல்வியை தழுவியது. இருந்த போதிலும் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் சிறப்பாக அணியை வழிநடத்தி சென்றுள்ளார். மேலும் பாட் கம்மின்ஸ் மீது எந்த அணிவீரரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் வீரர்கள் தவறுகளை செய்தாலும் பாட் கம்மின்ஸ் அவர்களை ஊக்கப்படுத்தி மீண்டும் வாய்ப்பு கொடுத்தார்.
இப்படி அற்புதமாக ஹைதராபாத் அணியை வழிநடத்திய பாட் கம்மின்ஸ் ஐபிஎல் ஏலத்தில் 20.5 கோடிக்கு வாங்கப்பட்டார். அப்போது பலர் இருக்கு இவ்வளவு சம்பளமா என்று விமர்சித்த நிலையில் அதற்கு தான் தகுதியான ஒருவன் என்று நிரூபித்து காட்டியுள்ளார் பாட் கம்மின்ஸ். இந்த நிலையில் தான் பாட் கம்மின்ஸ் குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து.
அவர் கூறுகையில் : அவர் இந்தியன் பிரீமியர் லீக் 2024 இல் ஒரு அமைதியாக எதிரியை தீர்த்துக்கட்டும் வீரராக இருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அவர் வழிநடத்திய விதத்தைப் பாருங்கள். அவர்கள் 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது ஐபிஎல் லீக்கின் இறுதிப் போட்டியை சென்றனர். பாட் கம்மின்ஸ் அவருக்காக ஹைதராபாத் அணி செலுத்திய ஒவ்வொரு பைசாவிற்கும் மதிப்புள்ளது. அவர் முன்னணியில் இருந்து அணியை வழிநடத்தினார் மற்றும் வீரர்கள் மீது கோபப்படுவதைக் காணவில்லை.
பாட் கம்மின்ஸ் சீசனின் தொடக்கத்திலிருந்தே வீரர்களை ஊக்கப்படுத்தினார். கம்மின்ஸ் இந்த ஐபிஎல்-ல் பரபரப்பாக இருந்தார், மேலும் அவரது உரிமையாளரின் ஈர்க்கக்கூடிய ஓட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததற்காக பெருமைக்கு தகுதியானவர் என்று கூறியுள்ளார் நவ்ஜோத் சிங் சித்து.