தொடர்ந்து நான்கு வெற்றிகளை பதிவு செய்தது நியுசிலாந்து அணி. ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வென்றது.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர்.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.
தொடர்ந்து வெற்றியில் இருக்கும் நியுசிலாந்து அணியுடன் அப்கானிஸ்தான் அணி மோதியது. உலகக்கோப்பை பதினாறாவது போட்டியில் நியூசிலாந்து அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணி சென்னையில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மோதியது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய விரும்பியது ஆனால் அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. நியூசிலாந்து அணியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்தது 288 ரண்களை எடுத்தது.
அணியின் அதிகபட்ச ரன்களாக பிலிப்ஸ் 71 ரன்களும் லேத்தம் 68 ரண்களும் யங் 54 ரன்கள் குவித்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன் உல் ஹக் மற்றும் அஹமதுல்லா தலா இரண்டு விக்கெட் களையும் ரஷித் கான் மற்றும் முஜீத் தலா ஒரு விக்கெட்டுகளையும் விழித்திருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி நிறைய கேட்ச்களை பிடிக்க தவறியது. இதுவும் அவர்களது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களம் இறங்கி ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் இருந்த சொதப்பி வந்தது 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 139 ரகளை மட்டுமே எடுத்து இருந்தது அணியின் அதிகபட்ச ரன்னாக ரஹமத்ஷா 36 ரண்களும் உமர்சாய் 27 ரன்களும் இக்ரம் 19 ரன்களை மட்டுமே அடித்தனர். பௌலிங்கில் சொதப்பியது போலவே பேட்டிங்கிலும் அப்கானிஸ்தான் அணி சொதப்பியது. சரியாக பார்ட்னர் ஷிப் அமைக்க வில்லை அப்கானிஸ்தான் அணி.
இங்கிலாந்தின் சார்பில் சான்ட்னர் மற்றும் லாக்கி பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளையும் போல்ட் 2 விக்கெட்டுகளையும் ரவீந்திர மற்றும் ஹென்றி தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். நியுசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி இந்த உலக கோப்பையில் தொடர்ந்து நான்கு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்றுள்ளது.