அடுத்து அடுத்து போட்டிகளின் சொதப்பல்கள். விமர்சித்தவர்களை வாயடைக்க செய்த சுப்மான் கில். அற்புதமான சதம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.நேற்று இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்திருந்தது. இந்தப் போட்டியானது விசாகப்பட்டினம் மைதானத்தில் நட
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.நேற்று இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்திருந்தது. இந்தப் போட்டியானது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்திய அணி ஆரம்பத்தில் மெதுவான தொடக்கத்தை அளித்து இருந்தாலும் அதன் பின் சிறப்பாகவே விளையாடி கொண்டு இருந்தது.இந்திய அணி 1 இன்னிங்க்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களை குவித்து இருந்தது.
இதில் ஜெய்ஸ்வால் மட்டுமே தனி ஒரு மனிதராக போராடி 209 ரன்களை குவித்து இருந்தார். இதில் அவர் 19 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அவர் அடித்து இருந்தார். இந்திய அணியின் தூணாக இருந்து இந்திய அணிக்கு ரன்களை குவிக்க உதவி இருந்தார். அதற்க்கு பிறகு அதிகபட்சமாக கில் 34 ரன்களும் படிதார் 32 ரன்களையும் அடித்து இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சாளர் அண்டர்சன், அகமது மற்றும் பஷிர் தலா மூன்று விக்கெட்டுகளையும் ஹார்ட்லி ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.
அதன் பின் நேற்றைய நாளை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தை அளித்து இருந்தனர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் திணறி இருந்தாலும் அதன் பின் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்து வந்தனர். இங்கிலாந்து அணி 253 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக க்ரேலி 76 ரன்களும் பேர்ஸ்டோ 25 ரன்களும் ஸ்டோக்ஸ் 47 ரன்களும் அடித்து இருந்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா இங்கிலாந்து அணியை சுருட்டி இருந்தார். பும்ரா 6 விக்கெட்டுகளையும் குல்தீப் 3 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.அதன் பின் இதே நாளில் மீண்டும் பேட்டிங் 28 ரன்களை பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. இன்றைய நாளில் ஆரம்பத்திலே கேப்டன் ரோஹித் ஷர்மா 13 ரன்னிலே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் ஜெய்ஸ்வால் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற கில் மட்டும் நின்று நிதானமாக விளையாடி ரன்களை குவித்து வந்தார்.
கடந்த சில மாதங்களவே சுப்மான் கில் மீது பல விமர்சனங்கள் எழுந்து உள்ளது. ஆனால் அதை எல்லாம் சரி செய்யும் வகையில் இன்றைய போட்டியில் 104 ரன்களை அடித்து இந்திய அணிக்கு பலத்தை சேர்த்து இருந்தார். இந்திய அணி தற்போது 6 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்து விளையாடி வருகிறது. ஆனால் இந்த கில்லின் பேட்டிங் அவரை அடுத்த போட்டிக்கு எடுத்து செல்லுமா என்று சந்தேகங்களும் எழுந்துள்ளது.
Back with a bang 👊pic.twitter.com/OnzYLwGJ7d
— CricTracker (@Cricketracker) February 4, 2024
சுப்மான் கில் கடைசி 6 போட்டிகளின் ரன்கள்.
1st Test Vs England 23 , o
2nd Test Vs South Africa 10 (11) , 36 (55)
3rd Test Vs Australia 21 (18) , 5 (15)
2nd Test Vs Bangladesh 20 (39) , 7 (35)
1st Test Vs Bangladesh 20 (40) , 110 (152)
5th Test Vs England 17 (24) , 4 (3)