தோனி ஒரு நேஷனல் ஹீரோ.. பிரையன் லாரா காலத்தில் நாங்கள் இல்லை ஆனால் – நிக்கோலஸ் பூரன் புகழாரம்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 34வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 34வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது.லக்னோ அணி இதற்க்கு முன்னதாக ராஜஸ்தான் அணியிடம் ஒரு தோல்வியை தழுவி இருந்தது. மற்று ஒரு பக்கம் சென்னை அணி மும்பை அணியிடம் வெற்றி பெற்று இந்த போட்டியில் மோதின.

இதில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விளையாடி வந்தது. ஆரம்பத்தில் லக்னோ அணியின் அதிகம் தான் அதிக அளவில் இருந்தது என்று சொல்லலாம். சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழித்து தடுமாற மற்று ஒரு பக்கம் ஜடேஜா நிதானமாக விளையாடி அவரது அசரி சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் களமிறங்கிய தல தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரன்களை மடமடவென ரன்களை சேர்த்தார்.

இறுதியில்  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து இருந்தது. அதன் பின் பேட்டிங் செய்த லக்னோ அணி சென்னை அணியின் பந்துவீச்சை எளிதாக அடித்து 19 ஓவர்களில் விக்கெட்டுகள் 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 82 ரன்களும் டி காக் 54 ரன்களையும் அடித்து இருந்தனர். இன்றைய போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சு சற்று சுமாராகவே இருந்தது என்றும் சொல்லலாம். எனவே லக்னோ அணி எளிதாக வெற்றி பெற்றது

இருந்த போதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். அவர் தனது அற்புதமான பேட்டிங்கினால் 9 பந்துகளில் 3 போர்கள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்களை அடித்திருந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

இந்நிலையில் தான் நேற்று சென்னை அணிக்கு எதிராக அற்புதமாக விளையாடிய நிகோலஸ் பூரன் தோனி குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் : இது இந்த சீசன் மட்டுமல்ல, ஒவ்வொரு சீசனிலும் நடைபெறுகிறது. எம்எஸ் தோனி பேட்டிங் செய்ய உள்ளே வரும்போது மைதானத்தின் வெளியே மஞ்சள் கடல் போல ரசிகர்களின் கூட்டமானது இருக்கிறது. அதனை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவர் ஒரு தேசிய ஹீரோ என்றார் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியின் வீரர் நிக்கோலஸ் பூரன்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் : பிரையன் லாரா காலத்தில் நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் எல்லோரும் அவருக்கு தீவிர ரசிகர்கள். ஆனால் அப்படி ஒரு காட்சியை இப்போது காண்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தோனியிடம் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மற்றும் விஷியங்களை பகிர்ந்து கல்லும் அந்த தருணங்களைப் நாங்கள் எங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு பெருமையாக சொல்ல முடியும் என்றார் நிக்கோலஸ் பூரன்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை