எங்களின் பயிற்சியாளர் தான் இந்த வெற்றிக்கு காரணம் – சென்னை அணியை வீழ்த்திய பிறகு பேசிய ராணா.
ஐபிஎல் 2023 தொடரில் 61 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற சேனனி அணி பேட்டிங் செய்யும் தேர்வு செய்தது. தலில் களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் யாரும் பெரிதாக ஆடாத நிலையில் சிவா துபே மட்டும் தனி ஆளாக விளைய
ஐபிஎல் 2023 தொடரில் 61 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற சேனனி அணி பேட்டிங் செய்யும் தேர்வு செய்தது. தலில் களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் யாரும் பெரிதாக ஆடாத நிலையில் சிவா துபே மட்டும் தனி ஆளாக விளையாடி 34 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். இருந்த போதிலும் சென்னை அணி இறுதியில் 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதற்க்கு பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் இருவரும் சிறப்பாக விளையாடினர். ரிங்கு 43 பந்துகளில் 54 ரங்களையும், கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா 44 பந்துகளில் 57 ரங்களையும் அடித்து கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய கொல்கத்தா அணியின் இந்த அற்புதமான வெற்றிக்கு கரணம் குறித்து பேசினார்.
நிதிஷ் ராணா பேட்டி :
அவர் கூறுகையில் “போட்டியின் பிந்தைய விளக்கக்காட்சியில் கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா பேசுகையில் “டாஸ்ஸில் மூன்று துறைகளும் சிறப்பாக செயல்பட்டாதால் எங்கள் வாய்ப்புகள் நன்றாக இருந்தது. இந்த பெருமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் சேர வேண்டும். நான் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் அவர் அதை வலியுறுத்தினார். ஆட்டத்தில் எதாவது தவறாக நடந்துவிடுமோ என்று பயந்தேன். ஆனால் அது நடக்கவில்லை, பந்து அதிகம் திரும்பவில்லை என்றார் நிதிஷ் ராணா.
புள்ளி பட்டியல் :
புள்ளி பட்டியலை பொறுத்தவரையில் சென்னை அணி 13 போட்டிகள் விளையாடி அதில் 7 போட்டிங்களில் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. கொல்காத்தா அணியை பொறுத்தவரையில் 12 புள்ளிகளுடன்7வது இடத்தில் இருக்கிறது. மேலும் சென்னை அணி அடுத்ததாக டெல்லி கேபிடல்ஸ் அணியை வரும் 20ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.
IPL/BCCI Points Table :
அதே போல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகயை பற்றி பேசுகையில் வரும் 20 ஆம் தேதி கொல்கத்தா அணி லக்னோ அணியை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இருந்த போதிலும் 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 7வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா பிளே ஆஃப் செல்வதற்கு 10 சதவிகிதம் வாய்ப்பு மட்டுமே இருக்கிறது.