டாஸில் ஏற்பட்ட குழப்பம், நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிதிஷ் ராணா.
ஐபிஎல் 2023 சீசனில் இன்று நடக்கும் 9வது லீக் ஆட்டத்தில் சென்னை கொல்கத்தா அணியை ஈடன் கார்டன் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி மழை காரணமாக பெரும் தோல்வியை தழுவிய நிலையில் ஆர்சிபிக்கு எதிரா
ஐபிஎல் 2023 சீசனில் இன்று நடக்கும் 9வது லீக் ஆட்டத்தில் சென்னை கொல்கத்தா அணியை ஈடன் கார்டன் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி மழை காரணமாக பெரும் தோல்வியை தழுவிய நிலையில் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது கொல்கத்தா அணி
கேகேஆர் :
கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் ஏற்கனவே அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதுகில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை. அதோடு அவர் அந்த காயத்திற்கு வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதினால் முற்றிலுமாக அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகி விட்டார். இவரோடு வங்கதேசத்தின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹாசனும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவவிட்டனர்.
மேலும் இவர்களோடு சேர்த்து அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் வங்காள தேசத்தின் வீரர் லிட்டான் தாஸ் விளையாடுவதினால் அவராலும் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இனைய முடியவில்லை. இவையெல்லாம் கண்டிப்பாக கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும், அதிலும் முதல் போட்டியிலேயே தோல்வியை தவிலுய கொல்கத்தா இன்று நடக்கும் போட்டியில் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என்று குறிக்கோளுடன் இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச தீர்மானித்தது. இதற்கிடையில், டாஸ் போடும் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணா பெரிய தவறு ஒன்றை செய்து விட்டார்.
#RCB have won the toss and elect to bowl first against #KKR at the Eden Gardens.
— IndianPremierLeague (@IPL) April 6, 2023
Live – https://t.co/V0OS7tFZTB #TATAIPL #KKRvRCB #IPL2023 pic.twitter.com/dmdLoz53QN
அதாவது போட்டி நடுவர் நாணயத்தை டாஸ் செய்ததும், டு பிளெசிஸும் தலை விழுந்ததாக சொன்னார். ஆனால் அவர் கூறியது நடுவருக்கு கேட்காத காரணத்தினால் நிதிஷ் ராணா வென்றதாக நடுவர் அறிவிக்கையில், ஆட்ட நடுவர் டு பிளெசி தலைவிழுந்ததாக கூற டு பிளெசி டாஸை வென்றதாக நடுவர் தெரிவித்தார். ஆனால் நிதீஷ் ராணா தான் தான் முதலில் வென்றதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் விதிகளின்படி டாஸ் பற்றி பேச நிதிஷ் ராணாவுக்கு உரிமை இல்லை. இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.