சொந்த மண்ணில் தோல்விக்கு பிறகு தவறை ஒப்புக்கொண்ட கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா.

இந்தியன் பிரீமியர் லீக்கில் 39 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பௌலிங்கை தேர்வு செய்தார். இரண்டாவது ஓவரி

By ·

இந்தியன் பிரீமியர் லீக்கில் 39 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பௌலிங்கை தேர்வு செய்தார். இரண்டாவது ஓவரில் ஜெகதீசன் வெளியேறி மீண்டும் அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தார். அதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷர்தூல் தாக்கூர் பேட்டிங் செய்ய வந்தார்.

வந்த வேக்கதிலே அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு புறம் குர்பாஸ் அதிரடியாக விளையடினார். மற்றொரு புறம் வந்த வெங்கடேஷ் ஐயர் 11 ராணாவும் 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்களை குவித்த நிலையில் நிதானமாக விளையாடி வந்த ரிங்கு சிங் 19 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த தனது அதிரடியான பாணியில் 19 பந்துகளில் 34 ரன்களை குவித்த நிலையில் அவுட்டாகினார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 179 ரன்களை குவித்தனர்.   

குஜராத் பேட்டிங் :

180 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய குஜராத் அணியில் யாரும் பெரிதாக விளையாடாத நிலையில்அதிரடியாக விளையாடிய கில் அரை சதத்தை பூர்த்தி செய்வர் என எதிர் பார்த்த நிலையில் 49 ரன்களில் சுனில் நரைன் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். கொல்கத்தா அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறியே வந்தனர்.

விஜய் ஷங்கர் மற்றும் மில்லர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். அதன் பின் அதிரடியை காட்டிய விஜய் ஷங்கர் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து குஜராத் அணியை வெற்றி பெற வைத்தார். 17.5 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.                         

ராணா கூறியது :

இந்நிலையில் கொல்கத்தா ணியில் தோல்விக்கு பிறகு பேசிய நிதிஷ் ராணா கூறுகையில் “பெரிய அணிகளுக்கு எதிராக நாங்கள் 20-25 ரன்கள் குறைவாக எடுத்தோம் என்று நினைக்கிறேன். குர்பாஸ் மற்றும் ரஸ்ஸல் ஆகியோரைத் தவிர, நான் உட்பட வேறு யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. மிடில் ஓவரில் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்திருந்தால் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கலாம். அங்கு தான் நாங்கள் தவறு செய்தாக உணர்கிறோம்.

முக்கியமான போட்டிகளில் உங்களுடைய அணியில் பேட்டிங், பீல்டிங், பௌலிங் உள்ளிட்ட மூன்றின் அடிப்படைகளையும் சரியாக செய்ய வேண்டும். இன்று எங்களுடைய பேட்டிங் சரியாக இருந்தது, ஆனால் நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை. சிறிய தருணங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக இனிவரும் போட்டிகளில் எங்களுடைய தவறுகளை சரிசெய்து கொண்டு முன்னேறுவோம் என்றார் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை