நீங்க என்ன தான் நல்ல விளையாடி இருந்தாலும் முதல் நாளில் வெற்றி பெற்றது நாங்க தான் – கெவின் பீட்டர்சன் அதிரடி பேச்சு

முதல் நாளில் வெற்றி பெற்றது இந்திய அணி இல்லை நாங்கள் தான் கெவின் பீட்டர்சன் அதிரடி பேச்சு. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. இன்று இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற

By ·

முதல் நாளில் வெற்றி பெற்றது இந்திய அணி இல்லை நாங்கள் தான் கெவின் பீட்டர்சன் அதிரடி பேச்சு. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. இன்று இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்திருந்தது. இந்தப் போட்டியானது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி ஆரம்பத்தில் மெதுவான தொடக்கத்தை அளித்து இருந்தாலும் அதன் பின் சிறப்பாகவே விளையாடி கொண்டு இருந்தது. ரோஹித் ஷர்மா 14 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி இந்திய அணி ஏமாற்றத்தை அளித்திருந்தார். அதன் பின்வந்த சுப்மான் கில் 34 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறி தனக்கு அளிக்கப்படும் வாய்ப்பை இழந்து கொண்டே வருகிறார். அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இவர்கள் இரண்டு பேர் மீதும் சமிபத்தில் சில குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே உள்ளது இந்த இரண்டு வீரர்களையும் நீக்கி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று பலர் கருத்துகளை கூறி வந்தனர். ஆனால் இந்த போட்டியில் விராட்கோலிஜடேஜா கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாத காரணத்தினால் மட்டுமே இந்த இரண்டு வீரர்களும் இந்த போட்டியில் விளையாடி உள்ளனர். இருப்பினும் அவர்கள் தங்களை நிருப்பிக்க தவறிவிட்டனர்.

இறுதியில் இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 336 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜெயஸ்வால் 179 ரன்களை அடித்துள்ளார். இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சாளர் அகமது மற்றும் பஷிர் தலா ஹார்ட்லி மற்றும் அண்டர்சன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இன்றைய நாளில் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை வீணாக்கி கொண்டே இருந்து வருகிறார்கள். முதல் நாள் குறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில்,

இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வரும் போது இந்திய அணி என்று விளையாடியது போல் அவர்கள் விளையாட மாட்டார்கள். இங்கிலாந்து பேட்டிங் செய்ய வரும் பொழுது அவர்கள் நிச்சயமாக பாசிட்டிவாகத்தான் விளையாட வருவார்கள் என்று நான் நினைக்கின்றேன். ஆடுகளம் நன்றாக தான் இருந்தது. பந்து அதிக அளவில் பவுன்ஸ் மற்றும் சூழல் பெருதளவில் இல்லாமல் சுமாராகத்தான் இருக்கின்றது.

இது போன்ற ஆடுகளத்தில் மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை மட்டும் தான் இழந்து இருக்க வேண்டும். ஜெய்ஸ்வாலுடன் இணைந்து வேறு பேட்ஸ்மேன்கள் குவித்திருக்க வேண்டும். ஆனால் தற்பொழுது ஜெயஸ்வால் உடன் அஸ்வின் மட்டும் தான் அவருடன் பேட்டிங் செய்து வருகிறார் எனவே ஜெய்ஸ்வால் ரன்களை குவித்து இருந்தாலும் முதல் நாளில் வென்றது இங்கிலாந்து அணி தான் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை