அந்த விஷயத்தில் தோனி ஒரு கலைஞன். அவர் செய்ததை போன்று இந்த உலகத்தில் யாராலும் செய்ய முடியாது – வெங்கடேஷ் ஐயர்.
முன்னாள் இந்திய அணியின் கேப்டனான தோனி இந்தியாவிற்காக பல போட்டிகளில் சிறப்பாக வழிநடத்தி மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் இந்தியாவுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். என்னதான் அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் ஒரு கோப்பையை அதுவும் உலக கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக விளையாடி
முன்னாள் இந்திய அணியின் கேப்டனான தோனி இந்தியாவிற்காக பல போட்டிகளில் சிறப்பாக வழிநடத்தி மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் இந்தியாவுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். என்னதான் அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் ஒரு கோப்பையை அதுவும் உலக கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக விளையாடி வெல்வது என்பது ஒரு சிறந்த தலைவன் வழிநடித்தினால் மட்டுமே முடியும். இந்த விஷயம் தோனியிடம் இருப்பதினால் தான் தோனிக்கு அளவுகடந்த ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அதே போன்று ஒரு அழுத்தமான சூழ்நிலையாக இருந்தாலும் சரி பாகிஸ்தான் போன்ற அணிக்கு 2 பந்தில் ஒரு ரன் மட்டுமே தேவை என்ற அழுத்தமான சூழ்நிலை இருந்தாலும் சரி அதனை அமைதியாக கையாண்டு வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். இதனால் தோனிக்கு கேப்டன் கூல் என்ற பட்டபெயரும் உள்ளது. இப்படி எல்லா விதத்திலும் சிறந்து விளங்கும் தோனிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களாக உள்ளனர்.
அந்த வகையில் ஒருவர் தான் இந்தியாவின் இளம் வீரரான கொல்கத்தா அணியை சேந்த வெங்கடேஷ் ஐயர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த இவர் கடந்த 2023 ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட சுவாரசியமான நிகழ்வை பற்றி பேசியிருந்தார்.
அவர் கூறுகையில் “நான் அப்போது சென்னை அணியை எதிர்த்து பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். அதன்போது ஒரு ஷாட்டை விளையாடினேன். ஆனால் அது நேரடியாக ஷார்ட்-தேர்ட் மேனில் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து அதமிழந்தேன். அதன் போது என்னடா இது ஷார்ட் தேர்ட்-மேன் முதலில் இருக்கக் கூடாதே என்று. ஏனென்றால் அவர் தவறான நிலையில் நின்றார். இந்த போட்டிக்கு பிறகு நாம் தோனியிடம் சென்று எப்படி என்னை ஆட்டமிக்க செய்தீர்கள் என்று கேட்டேன்.
Venky Iyer about MS Dhoni's craze, his star struck moment and Dhoni's genius field placements pic.twitter.com/RayIsVBC02
— mvrkguy (@mvrkguy) June 29, 2023
அதற்கு அவர் கூறினார் ‘நீங்கள் பேட்டிங் செய்யும் விதத்தில், எல்லா பீல்டர்களும் கொஞ்சம் தூரமாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் நான் அவரை கொஞ்சம் மாற்றி வைத்தேன். என்று தோனி கூறியதாக தெரிவித்தார் வெங்கடேஷ் ஐயர். மேலும் தோனி அளித்தமான் சூழ்நிலைகளில் அமைதியாக செயல்படுவது குறித்து புகழ்ந்து தள்ளிய அவர் கூறுகையில் “அவரது அமைதி, அழுத்த சூழ்நிலைகளில் எதிர்வினையாற்றுவது போன்றவை அசாதரணமானவை.
அவருடைய அந்த அமைதியான மனநிலை அவரை சிறந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறது. அழுத்தமான சூழ்நிலைகளில் செயல்படுவதற்கு நாம் தோனியை உதாரணமாக காட்டுகிறோம். ஏனென்றால். அவர் அமைதியாக இருந்து அழுத்தமான சூழ்நிலையில் செயல்படும் ஒரு கலைஞன். அவரினால் செய்ய முடிந்த இந்த ஒன்றை உலகின் யாராலும் செய்ய முடியாது என்றார் வெங்கடேஷ் ஐயர்.