“விராட்டும் இல்லை ஷமியும் இல்லை. இவர் தான் எக்ஸ் பேக்ட் வீரர்”- இங்க்லாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மோர்கன் சமி குறித்து சில வற்றை பகிர்ந்துள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இ

By ·

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மோர்கன் சமி குறித்து சில வற்றை பகிர்ந்துள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்ய உள்ளது. இந்த போட்டியானது வரும் நாளை நடைபெற உள்ளது.

இந்திய அணி இந்த உலக கோப்பையில் இதுவரை ஒரு தோல்வியை கூட கண்டிராமல் பலம் வாய்ந்த அணியாகவும் மற்றொன்று பக்கம் ஆஸ்திரேலியா அணியும் இரு தோல்விகளை தழுவி இருந்தாலும் அதன் பின் வந்து அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஞாயிறு அன்று இந்தியாவை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா போட்டியில் ஆஸ்திரேலியா அணி தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் ஒருமுறை அரை இறுதி சுற்றில் வந்து தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது. 31 வருடங்களாக தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. இந்திய அணியைப் பொறுத்த வரைக்கும் மூன்று துறைகளிலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்படுகிறது. அதாவது பவுலிங் பேட்டிங் மற்றும் பில்டிங் என மூன்று துறையில் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அணிக்கு அதிக அளவில் ரன்கள் குவித்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் 700 ரன்களை கடந்து விட்டார் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் 500 ரன்கள் அடித்திருக்கின்றார்கள். இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து எப்போதும் ஒரு விமர்சனம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது ஆனால் அதனை இந்திய அணி இந்த உலக கோப்பை போட்டியில் நிறைவு செய்து உள்ளது.

கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் மிடில் ஆர்டரில் இருவரும் இணைந்து அணிக்கு அற்புதமாக விளையாடி ரன்களை குவித்து இந்திய அணி வெற்றிக்கு ஒரு தூணாக இருக்கின்றார்கள். இந்த உலகக்கோப்பை தொடரிலும் ஒரு மிடில் ஆர்டரில் 500 ரன்கள் அடித்த வீரரும் ஷ்ரேயஸ் ஐயர் தான். ஜடேஜாவும் சில போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி உள்ளார். ஜடேஜா குறித்து முன்னாள் இங்கிலாந்து அணியின் வீரர் கிரேம் ஸ்வான் கூறுகையில், நான் எப்பொழுது இந்த ரவீந்திர ஜடேஜாவைத்தான் எக்ஸ்பெக்டராக தேர்ந்தெடுப்பேன். இந்த உலக கோப்பையில் அவர் மிகவும் அமைதியாக போயிருக்கின்றார். அவருக்கு இந்திய அணியில் அவ்வளவு பேட்டிங் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நான் எப்பொழுதும் பெரிய வீரரை தான் தேடுவேன். தோல்விக்கான அழுத்தங்கள் அதிகரிக்கும்போது அவர் சிறப்பாக செயல்படுவார்.

குறிப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் அவர் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணியில் என்னை நம்பிக்கையாக பார்க்க வைக்கும் ஒரே வீரர் அவர் தான். அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலுமே அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றார். அவர் எதைப் பற்றியும் பெருத்தளவில் கவலைப்படுவதாக எனக்கு தெரியவில்லை. பிறகு பந்து வீச்சில் ரவிந்திர ஜடேஜாவை எடுத்துக் கொண்டால் அவர் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா பேட்ஸ்மன்களால் ஒன்றும் செய்ய முடியாது அந்த அளவிற்கு பந்து வீசுவார். ஆஸ்திரேலியா வீரர்கள் ஜடேஜாவிடம் எப்போதும் தடுமாறி தான் வருகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை