அத்தனை நாட்கள் நான் காயத்துடன் விளையாடினேன். தற்போது தான் எனக்கு விதி மீது நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது – ரஜத் படிதார்.
உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேட்ட நேரம் தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடிவயில்லை. அது இந்த வருடம் மாறும் என்றிருந்த நிலைய
உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேட்ட நேரம் தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடிவயில்லை. அது இந்த வருடம் மாறும் என்றிருந்த நிலையில் தொடர்கதையாக மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்த போதிலும் அடுத்த வருடம் டி20 உலக கோப்பை போட்டியானது நடக்க இருப்பதினால் அதில் இந்தியா சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பல ஏற்பாடுகளையும் இந்திய அணி தீவிரமாக செய்து வருகிறது.
குறிப்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி சோதனை செய்து வருகிறது. அதில் முதற்கட்டமாக இந்திய அணி 5 தொடர்களை கொண்ட டி20 போட்டியில் 2 இல் வெற்றி பெற்று 1இல் தோல்வியை தழுவி இன்று நான்காவது போட்டியை விளையாட உள்ளது.அதன் முதல் படியாக இந்தியா vs ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, கெய்க்குவாட் போன்ற இளம் வீரக்ளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இதற்கு அடுத்து வரும் தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
ரஜத் பட்டிதார் இவர் ஜெய்ஸ்வால் திலக்வர்மா ரின்கு சிங் முன்பாகவே இந்திய அணியில் தேர்வாணர். 2022ஆம் ஆண்டு தற்போது விளையாடி வரும் பெங்களூர் அணியால் அவர் வாங்கப்படவில்லை. பெங்களூர்அணியின் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்படவே அவருக்கு மாற்று வீரராகவே இவர் பெங்களூர் அணியில் இணைந்தார். எந்த ஒரு பேட்ஸ்மேனும் பிளே ஆப் சுற்றில் இரண்டு முறை சதத்தை கடந்தவர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும் இவர் தற்பொழுது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் உலக கோப்பை போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இப்பொழுதுதான் நான் விதியை கொஞ்சம் நம்புகிறேன். விதி என்ன எழுதுகின்றது என்பது பற்றி நான் அதிகம் யோசிப்பது இல்லை. ஐபிஎல் போட்டி தொடரில் நான் முதல் சதம் அடிப்பதற்கு முன்பாக ஒரு போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டி நான் அரை சதத்தை கடந்திருந்தேன். அப்பொழுது தான் எனக்கு சதம் என்னால் சதம் அடிக்க முடியும் என்று நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
நான் சிறந்த வீரர்களை பார்த்து கற்றுக் கொண்டது என்னவென்றால் டி20 போட்டியில் நிலைத்து நிற்க வேண்டும் புதிய ஷாட்களை அடிக்க கூடாது நிலைத்து நின்ற விளையாடினால் போதும் என்று நினைத்தேன். எனக்கு தசை நாரில் காயம் ஒன்று ஏற்பட்டது அதன் பின் அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது சரியாக உள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன்பாக மூன்று வருடங்கள்தான் நான் வலியுடன் விளையாடி கொண்டு இருந்தேன். அறுவை சிகிச்சைக்கு பிறகு எனக்கு தற்போது நன்றாக விளையாட முடியும் என்று நம்பிக்கை இருக்கின்றது என்னால் சமாளிக்க முடியும் என்று எனக்கு தெரியும் என்று அவர் கூறியிருந்தார்.
டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா , வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.