“இந்த ஆண்டு எனக்கு இந்த ஒரே ஒரு குறிக்கோள் தான்.” ஆரஞ் கோப்பை வென்ற ரியான் பராக் பேச்சு
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய 14வது போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலபரீட்சை செய்தது.மும்பை அ
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய 14வது போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலபரீட்சை செய்தது.மும்பை அணி இதற்கு முன்பு நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இந்த முக்கியமான போட்டியில் களமிறங்கியது. இது மும்பை அணியின் 250 ஆவது போட்டியாகும்.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. மும்பை 20 ஒவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே அளிக்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த பந்துவீச்சாளரான போல்ட் தான்.அவர் 4 ஒவர்களை வீசி 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார். ரோகித் ஷர்மா நமன்திர் மற்றும் ப்ராவிஸ் ஆகியோர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தார். அந்த மூன்று வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறின. எனது அதன் பின்பு மிடில் ஆர்டரில் திணறிவது இருப்பினும் அவர்களால் 20 ஒவர்கள் முடிவு 125 கரங்களை மட்டுமே அடிக்க முடிந்தது
அதன் பின் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களிலே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 39 பந்துகளில் 54 ரன்களையும் அஷ்வின் 16 ரன்களையும் பட்லர் 13 ரன்களையும் அவர் அடித்து இருந்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தனது ஹோம் கிரவுண்டில் 250 வது போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் ரியான் பராக் முதல் இடத்தில் இருந்து வருகிறார்.
இதற்க்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பராக் எதற்கு என்றும் அவர் அணியில் தேவை இல்லாத ஆள் என்றும் பல விமர்சனங்கள் அவர் மீது எழுந்துள்ளது.இணையத்தில் அவரை மிகவும் விமர்சனம் செய்து வந்தது. இதில் சிறப்பான ஆட்டம் மூலம் போட்டியை வென்றது மட்டுமல்லாமல் அவர் இந்த ஐபிஎல்லில் அதில அதிக ரன்களை குவித்த வீரர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், உண்மையில், நான் நிறைய விஷயங்களைச் செய்ய முயற்சிப்பதற்குப் பதிலாக எல்லாவற்றையும் எளிமைப்படுத்தினேன். முன்பு நான் ரன்களை எடுக்காமல் இருந்தபோது நான் பல விஷயங்களை முயற்சிப்பேன்.
இந்த ஆண்டு, அது பந்தைப் பார்த்து பந்தை அடிப்பதுதான். எப்போது நான் உள்நாட்டில் விளையாடுவது இதுதான் நான் பேட்டிங்கிற்குச் செல்லும் சரியான சூழ்நிலைகள். ஜோஸ் பாய் மற்றும் ஆஷ் பாய் வெளியேறியதும், உள்நாட்டு கிரிக்கெட்டில் இதைத்தான் நான் செய்கிறேன் என்று எனக்குள் நினைத்தேன். அதனால் நான் கணக்கிட்டேன்/ [உள்நாட்டு நிலைக்கும் மற்றும் ஐபிஎல் லெவல்] நான் மூன்று-நான்கு வருடங்கள் விளையாடாமல் இருந்தேன்.
நீங்கள் உண்மையிலேயே ஹோட்டல் அறைக்கு திரும்பிச் சென்று, உங்களால் முடியும் என்று உங்களுக்குத் தெரிந்தால், முடிவுகள் வரவில்லை, நான் இந்த மாதிரியான அளவில் பயிற்சி செய்யவில்லை என்பதை உணர்ந்து, நான் சென்று அதைச் செய்தேன். இதுபோன்ற வேகமான பந்துகள் மற்றும் இதுபோன்ற காட்சிகளை நான் நிறைய பயிற்சி செய்தேன், அதனால்தான் இந்த அளவிற்கு விளையாட முடிந்தது என்றும் அவர் கூறினார்.