“நமக்கு கப்புதான் முக்கியம்” இந்தியாவிடம் வெற்றி, தோல்வி கிடையாது – பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன் ஷிப் தொடரில் தான் இந்தியா கடைசியாக வென்றது. அதற்கு பிறகு நடந்த ஒரு உலக கோப்பை போட்டியிலும் கூட இந்தியாவினால் கோப்பைகளை வெல்ல முடியவில்லை. இந்த நிலை சமீபத்தில் நடந்த சாம்பியன் ஷிப் உலக கோப்பை போட்டியோடு முடிவடையும் என்றிருந்த நிலையில் இந்த

By ·

கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன் ஷிப் தொடரில் தான் இந்தியா கடைசியாக வென்றது. அதற்கு பிறகு நடந்த ஒரு உலக கோப்பை போட்டியிலும் கூட இந்தியாவினால் கோப்பைகளை வெல்ல முடியவில்லை. இந்த நிலை சமீபத்தில் நடந்த சாம்பியன் ஷிப் உலக கோப்பை போட்டியோடு முடிவடையும் என்றிருந்த நிலையில் இந்தியா பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் வரும் ஆக்டோபர் மாதம் இந்தியாவிற்கு மற்றொரு வாய்ப்பாக உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடக்க இருக்கிறது.

அதற்கான அட்டவணை சமீபத்தில் தான் வெளியானது. உலக கோப்பை தொடரின் முதல் அக்டோபர் 5ஆம் தேதி நடப்பு சம்பியன்களான இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் vs இந்தியா போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் 15ஆம் தேதி உலகில் மிகச்சிறப்பான மைதானங்களில் ஒன்றான நரேந்திர மோடி மைத்தனத்தில் நடைபெற உள்ளது.

கடந்த 7 உலக கோப்பை போட்டிகளிலும் இந்தியா பாகிஸ்தானை 7 முறை வீழ்த்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது. ஆனால் அவர்களினால் 50 ஓவர்களில் வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில் இந்த வருட உலக் கோப்பையில் இந்த அற்புதமான இரண்டு அணிகளும் மோத இருக்கும் நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் வீரர் ஷதாப் கான் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஷதாப் கான் கூறியது :

இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது என்பது ஒரு வித்தியாசமான மகிழ்ச்சியை கொடுக்கிறது. குறிப்பாக அவர்களுடைய நாட்டில் சென்று அவர்களுடைய மைத்தனத்தில் விளையாடுவது என்பது முற்றிலும் வேறு மாதிரியான உணர்வு. ஆனால் எங்களுடைய மொத்த கவனமும் உலக கோப்பையை வெல்லுவதில் தான் இருக்க வேண்டுமே தவிர இந்தியாவை வீழ்த்துவதில் மட்டுமே இருக்க கூடாது.

நாம் உலக கோப்பையை வெல்ல இந்தியாவிற்கு செல்கிறேன். எனவே நம்முடைய உச்ச கட்ட குறிக்கோளான உலக கோப்பையை வெல்லாமல் இந்தியாவை மட்டுமே வீழ்த்துவதினால் நமக்கு எந்த பயனும் கிடைக்காது. என்னயுடைய கருத்தின் படி இந்தியாவிடம் தோற்றாலும் உலக கோப்பையை இந்தியாவில் வென்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றி தான். ஏனென்றால் அதுதான் எங்களுடைய முக்கிய நோக்கம் என்றார் பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான்.

ஷதாப் கான் கடந்த 2019 உலக கோப்பையின் போது பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். இங்கிலாந்தின் மாஞ்செஸ்டரில் நடந்த அந்த போட்டியில் இந்தியா அணி அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் ரோஹித் சர்மா 140 ரன்கள் அடிக்க கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் அரை சதங்கள் விளாசினார்கள். இதனால் இந்தியா 7 விக்கெட்டுகளை 336 ரன்கள் எடுத்திருந்தது. அதே நேரத்தில் மலை குறுக்கிட்டதால் போட்டியானது 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு 300 டார்கெட் வாய்த்த நிலையில் பஸ்க்தான் 212\6 மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை