இந்தியா எங்களுக்கு கொடுத்த இந்த பரிசுக்கு நன்றி – தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரில் விளையாடும் இந்த அணியே உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் லெவனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நாள் மழை காரணமாக தடைபட்ட நிலையில் அடுத்த நாள் மீண்டும் அந்த போட்டியானது தொடர்ந்த்து. மேலும் இந்த நாளில் அற்புதமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் சதம் விளாசி அசத்தி இருந்தனர்.இதனால் இந்திய அணி இந்திய அணி 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது.
பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி இன்று இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் விராட் மற்றும் ராகுல் சிறப்பாக செயல்பட்ட நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் இந்த மோசமான தோல்விக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் கிராண்ட் ப்ராட்பர்ன் கூறுகையில் இந்திய அணி தங்களுடைய சில பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது என பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் “கடந்த 2 நாட்களாக கிடைத்த தோல்வி பரிசுக்கு நாங்கள் நன்றி உடையவர்களாக இருக்கிறோம் என்பதே என்னுடைய ஆதங்கமாகும். இந்திய அணியில் இருக்கும் சில தரமான வீரர்களை நாங்கள் அடிக்கடி எதிர்கொள்வதில்லை
இருப்பினும் கடந்த 3 மாதங்களில் நாங்கள் பெரிய அளவில் தோல்வியை சந்திக்கவில்லை. எனவே இது எங்களுக்கு நல்ல விழித்துக் கொள்ளும் தருணமாக அமைந்துள்ளது. ஆனால் இதிலிருந்து கிடைத்த பாடங்களில் நாங்கள் ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டும். மேலும் கடந்த 2 நாட்களாக நாங்கள் சிறப்பாக செயல்படாததற்காக இந்த தோல்வி பரிசாக கிடைத்துள்ளது”
அத்துடன் போட்டியில் அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. 2 நாட்களாக நாங்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார் கிராண்ட் ப்ராட்பர்ன். இவர் சொல்வது போல பாகிஸ்தான் அணி மீது இந்தியாவின் சில ஜாம்பவான்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ஏனென்றால் அந்த அளவிற்கு தரமான பந்துவீச்சு அவர்களிடம் இருந்தது. ஆனால் இந்த போட்டியில் அந்த பந்து வீச்சு பலிக்காமல் போனது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.