பாகிஸ்தான் அரசியலில் அதிகம் கவனம் செலுத்தி கிரிக்கெட்டில் குறைவான கவனத்தை செலுத்தி வருகிறது – முன்னாள் பாக்.வீரர் காட்டம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் கவலைக்கிடமாக தற்போது இருந்து வருகிறது. பாகிஸ்தானின் செயல்பாடுகள் திடீரென மோசமாக மாறியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்து பல்வேறு கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட்க்குள் அரசியல் இருக்கின்றது தற்போது பாகிஸ

By ·

பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் கவலைக்கிடமாக தற்போது இருந்து வருகிறது. பாகிஸ்தானின் செயல்பாடுகள் திடீரென மோசமாக மாறியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்து பல்வேறு கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட்க்குள் அரசியல் இருக்கின்றது தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் சிக்கலாக மாறியிருக்கின்றது.பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்த உலக கோப்பை போட்டியில் இதுவரை 6 போட்டிகளில் விளையாட நிலையில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் தற்போது இருந்து வருகிறார். பாகிஸ்தான் அணியானது இதற்கு முன்பு உள்நாட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது மிகவும் வெற்றிகள் வரவே அது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு குறித்தும் அதற்குள் இருந்த அரசியல் தேர்வு செய்திகள் வெளி வராமல் இருந்தது. ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டியில் தோல்விகளை தழுவி வருவதால் இப்போது பூதாகரமாக வெடித்து. தற்போது ஒரு நாள் தொடரை விளையாட வந்ததும் பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் தற்போது வெளிப்படையாக தெரிகிறது.

பாகிஸ்தானின் பலவீனங்கள் வெளிப்பட்டு தோல்விகளை தழுவி வருவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புகளில் இருக்கும் பிரச்சினைகளும் தற்போது வெளியே வர ஆரம்பித்துள்ளது. தற்போது பாகிஸ்தான் அணியின் மூத்த பொறுப்பில் இருந்து முன்னால் இன்சமாம் உல் ஹக் தன்னுடைய பொறுப்பில் இருந்து நேற்று விலகுவதாக செய்திகள் வெளியாகி வந்தன. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விளக்கி விடுவதாகவும் அவர் எச்சரித்து வருகின்றது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பாபர் அசாம் பேசியதாக சில வாட்சப் சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கூறுகையில் ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட்டில் அதிகம் கவனம் செலுத்தி அரசியலில் குறைவான கவனம் செலுத்தி வருகின்றது ஆனால் பாகிஸ்தான் அரசியலில் அதிகம் கவனம் செலுத்தி கிரிக்கெட்டில் குறைவான கவனத்தை செலுத்தி வருகிறது.

தற்போது அணி மிகவும் மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனின் அச்சுறுத்தல் தந்து கொண்டிருப்பது அது கிரிக்கெட் வீரர்களின் மன வலிமையை குறைக்கின்றது. மேலும் இது அனைத்து அணியில் ஏற்பட்ட குளறுபடி இருக்கும்போது நடப்பதால் இன்னும் சிக்கல் ஆகின்றது.பாகிஸ்தான் அணி மோசமான கட்டத்தில் தற்போது இருந்து வருகின்றது. பாகிஸ்தான கிரிக்கெட் வாரியத்திலும் மாற்றங்கள் செய்ய வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை