தோல்விக்கு பிறகு பாபர் அழுதிருக்கிறார் – உண்மையை உடைத்த முன்னாள் பாக் வீரர்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 23 ஆம் தேதியில் பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்வது அ

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 23 ஆம் தேதியில் பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்வது அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. நீண்ட நாட்களாக தடுமாறி வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் இந்த போட்டியில் அவருடைய சிறப்பான பேட்டிங்கின் மூலம் 50 ஓவர்களில் 282 ரன்களை குவித்தது.

283 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். மேலும் பாகிஸ்தான் அணியின்பீல்டிங் மற்றும் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்த காரணத்தினால் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவரிலே மாபெரும் வெற்றியை அடைந்தது.

இந்த தோல்வியினால் பாகிஸ்தான் அணியானது இந்த உலக கோப்பை போட்டியில் அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் ஆபகானிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவிய பிறகு பாபர் அசாம் அழுதார் என்று தான் கேள்விப்பட்டதாக முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரர் முகமது யூசப் கூறியுள்ளார்.

அவர் பேசுகையில் “ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த பிறகு பாபர் அழுததாக கேள்வி பட்டேன். இது பாபரின் தவறு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணியும் நிர்வாகமும் சம்பந்தப்பட்டது. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் பாபருடன் இருக்கிறோம், முழு தேசமும் அவருடன் உள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் போட்டி முடிந்த பிறகு பேசுகையில் “இது எங்களை காயப்படுத்துகிறது. நாங்கள் நல்ல ஸ்கொரை வைத்திருந்தோம். பந்துவீச்சில் நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்காததால் எங்களுக்கு அது பெரிய விலையை கொடுத்து தோல்விக்கு காரணமாகியது. உலகக் கோப்பையில், நீங்கள் ஒரு துறையில் கூட சிறப்பாக செயல்படவில்லை என்றால், பிறகு. நீங்கள் ஆட்டத்தில் தோற்றுவிடுவீர்கள்.

பீல்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படாவிலி. பௌலிங் நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், மிடில் ஓவர்களில் எங்களுக்கு விக்கெட்டுகள் தேவைப்பட்டன, ஆனால் பீல்டிங் மற்றும் பௌலிங் மோசமாக இருந்ததால் எங்களால் எந்த விக்கெட்டையும் எடுக்க முடியவில்லை என்று கூறினார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இன்னமும் 4 போட்டிகள் இருக்கும் நிலையில் அதில் வெற்றிபெறும் பட்சத்தில் அறையிருதி போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை