கடைசி வரை போராடி வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி. தொடரும் பாகிஸ்தான் அணியின் தோல்வி.

கடைசி வரை போராடி தோற்ற பாகிஸ்தான் அணி தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 26ஆவது போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியும் பாகிஸ்தான் அணியும் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தி

By ·

கடைசி வரை போராடி தோற்ற பாகிஸ்தான் அணி தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 26ஆவது போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியும் பாகிஸ்தான் அணியும் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியை இந்த மைதானத்தில் நடைபெறும் கடைசி இந்த உலகக் கோப்பை போட்டியாகும்.

தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திலும் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த மூன்று தோல்விகளின் மூலம் புள்ளி பட்டியல் ஆறாவது இடத்தில் இருந்து வருகிறது. பாகிஸ்தான அணியை பொறுத்தவரையில் இந்த உலகக் கோப்பை ஆனது சற்று சுமாராகவேத் தான் நடந்து வருகிறது. பாகிஸ்தானின் அணியின் செயல்பாடுகளை குறித்து பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு காரணம் பாபர் அசாம் சரியாக வழி நடத்தவில்லை என்றும் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். அதுக்கேற்றார் போல் அவரும் ஆரம்பத்தில் ரன்களை குவிக்காமல் இருந்தாலும் தற்போது இரண்டு போட்டிகளில் நன்றாக ரன் அடித்து வருகிறார். தென்னாப்பிரிக்கா அணி கடந்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் வீழ்த்தி இருந்தது. இதில் இங்கிலாந்து அணியை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.

அதன்பின் பங்களாதேஷ் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வலுவான அணியாக இந்த போட்டியில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. 46.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளின் இழந்து 270 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியின் அதிகபட்சமாக ஷகீல் 52 ரண்களும் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்ளும் சாதாப் கான் 43 ரன்களையும் குவித்தனர்.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஷம்சி நான்கு விக்கெட்டுகளையும் ஜான்சன் மூன்று விக்கெட்டுகளையும் கோட்ஸி இரண்டு விக்கெட்டுகளையும் லுங்கி இங்கிடி ஒரு விக்கெட்டையும் விழித்திருந்தார். 271 ரன்கள் என்ற இலக்கை கொண்டு களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பத்தில் நன்றாக தொடக்கம் கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட தென்னாப்பிரிக்க அணி ஓவர்களில் 1 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்சமாக ஏடன் மார்க்ரம் 91 ரன்களும் டேவிட் மில்லர் 29 ரன்களும் கேப்டன் பவுமா 28 ரண்களையும் அடித்திருந்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் முகமது வாசிம் இரண்டு விக்கெட் களையும் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் வாசிம்,ராப் மற்றும் உஸ்மானிர் தலா இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். பாகிஸ்தான் அணிக்கு தொடர்ந்து தோல்விகளை மட்டுமே தழுவி வருகிறது இதே போல் இருந்தால் இந்த உலக கோப்பை அரை இறுதியில் வருவது சந்தேகம் என்றும் பலரும் பாகிஸ்தானை விமர்சித்து வருகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை