வாய்ப்பு தந்தால் பயன்படுத்தி கொள்ள வேண்டும் – சஞ்சு சாம்சன் மீது அதிருப்தி தெரிவித்த முன்னாள் விக்கெட் கீப்பர்.

சஞ்சு சாம்சன் திறமையுள்ள பேட்ஸ்மேன், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மிகவும் திறமையாக வழிநடந்திய அவர் பேட்டிங்கிலும் சிறப்பாகவே விளையாடினார். இதனால் இவருக்கு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்பை சஞ்சு சாம்சன் சரியாக பயன்படுத்தி கொள்ளவில

By ·

சஞ்சு சாம்சன் திறமையுள்ள பேட்ஸ்மேன், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மிகவும் திறமையாக வழிநடந்திய அவர் பேட்டிங்கிலும் சிறப்பாகவே விளையாடினார். இதனால் இவருக்கு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்பை சஞ்சு சாம்சன் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதாவது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2வது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார். அவர் இருந்திருந்தால் இனமும் கொஞ்சம் ரன்களை இந்தியா அடித்திருக்கும். மேலும் இது முதல் முறை கிடையாது, கடந்த போட்டியிலும் கூட இவர் ரன் அவுட் ஆனது போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கேயும் சஞ்சு சாம்சன் தன்னுடைய வாய்ப்பை இழந்து விட்டார். அதோடு அதற்கு முன்னர் ஒருநாள் போட்டியிலும் அவர் சரியான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் தான் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சஞ்சு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்திவ் படேல் அவர் கூறியதாவது ” ஒவ்வொரு முறை இந்தியா தோல்விடையும் போதும் நம்முடைய எதிர்மறையான எண்ணங்களை பார்க்கிறோம். ஒயிட்-பால் தொடர் முழுவதும் பேட்டர்கள் நீண்ட நேரம் பேட் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி பேசப்பட்டு வருகிறது. அது இதுவரை யாரும் செய்யவில்லை. சஞ்சு சாம்சன் அணியில் இல்லாத ஒவ்வொரு முறையும் நாங்கள் அவரைப் பற்றி பேசுகிறோம். ஆனால் அவர் இதுவரை பெற்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை.

அவருக்கு இந்த கிரிக்கெட் வாழ்க்கையில் நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு அப்படிதான் தெரிகிறது. உண்மையைச் சொல்வதானால் சாம்சனுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அவர் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்தவில்லை. இந்திய அணியின் பேட்டிங்கில் எனக்கு தெரிந்து சரியாக பேட்டிங் செய்தது திலக் வர்மா மட்டும் தான். திலக் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் திறமையாக செயல்பட்டர்.

அவர்களுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப், சிக்ஸர் அடித்த விதம் போன்ற ஷாட்டுகளை மிகவும் திறமையாகவே விளையாடினார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சும் சரியாக இருந்தது. அவர்கள் எந்த தவறும் செல்லையாமல் பந்துவீசிழும் பீல்டிங்கிலும் செயல்பட்டார்கள். சூரியகுமார் போன்ற ஒரு பேட்மேனை அவுட் செய்தது அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுதது. மேலும் பந்துவீச்சாளர்களும் சரியான லெந்தில் வீசினார்கள் என்றார் பார்த்திவ் படேல்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை