சுலபமாக கட்டுப்படுத்தியிருப்போம். ஆனால் பிரச்சினையே அவர் அடித்த சதத்தில் இருந்துதான் வந்தது – பாட் கம்மின்ஸ் பேட்டி.

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா மூன்றவது போட்டியிலும் வெற்றி பெற நம்பிக்கையுடன் களமிறங்கியது. அதே நேரத்தில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிவிட கூடாது என்ற

By ·

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா மூன்றவது போட்டியிலும் வெற்றி பெற நம்பிக்கையுடன் களமிறங்கியது. அதே நேரத்தில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிவிட கூடாது என்று இங்கிலாந்து கடுமையாக போராடியது. இதனிடையே மூன்றவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதனால் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக விக்கெட்டுகள் விழ மிச்சில் மார்ஸ் மட்டுமே பொறுமையாக நின்று சதம் அடித்தார். அவரை தவிர மற்ற எந்த வீரர்களும் பெரிகாக ரன்கள் எடுக்காத நிலையில் ஆஸ்திரேலியா 263 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்தும் மோசமாக விளையாட 237 ரன்களில் சுருண்டது. இதனால் 3வது போட்டியும் ஆஸ்திரேலியாவிற்குத்தான் என்று எதிர்பார்த்த நிலையில் அஸ்திரலேயா மளமளவென விக்கெட்டுகளை இழந்து இரண்டாவது இன்னிங்கில் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 251 எடுத்தால் வென்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் ஹேரி ப்ரூக் பொறுமையாக விளையாடினார். ஒரு பக்கம் சிறப்பாக கடந்த போட்டியில் விளையாடிய கேப்டன் பேன் ஸ்டோக்ஸ் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆஸ்திரலியாவிடம் ஆட்டம் திரும்பினாலும், கடைசி வரையில் பொறுமையாக விளையாடிய ப்ரூக் 73 ரன்களை விளாசினார். பின்னர் கிரிஸ் வோக்ஸ் சிறப்பான வெற்றியினால் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

பாட் கம்மின்ஸ் பேட்டி :

இந்நிலையில் பேட்டி முடிந்து பேசிய பாட் கம்மின்ஸ் கூறுகையில் “இந்த போட்டியில் ஒருநாள் ஏற்றமாகவும் மற்றொருநாள் இறக்கமாகவும் இருந்தது. சொல்லப்போனால் வரும் 20- 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது என்பது மிகவும் பெரிய பின்னடைவை எங்களுக்கு கொடுத்தது. மிட்சல் மார்ஷ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு வந்தவர்கள் பெரிதாக ரன்களை எடுக்க முடியவில்லை இது எங்களுக்கு சிக்கலை கொடுத்தது.

250 ரன்கள் என்பது கட்டுப்படுத்த கூடிய ரன்கள் தான் ஆனால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பந்துகளை வீசவில்லை. வார்னர் லாட்ஸ் மைத்தனத்தில் சிறப்பாக விளையாடியானர். டெஸ்ட் போட்டிகளில் மிச்சல் மார்ஸ் விளையாட முயர்த்தி செய்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மீண்டும் விளையாட வந்திருக்கும் அவர் மிகச் சிறப்பாக விளையாடுகிறார்.

எங்களுடைய வீரர்கள் சிறப்பாகவே செயல்பாட்டார்கள். அடுத்த போட்டி வருவதற்கு இன்னமும் சில நாட்கள் இருக்கிறது. எனவே அந்த நாட்களை பயன்படுத்தி நாங்கள் இழந்த சக்தியை மீண்டும் திரும்ப பெற்று மான்செஸ்டர் மைத்தனத்தில் மீண்டும் காம்பேக் கொடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்தார் பாட் கம்மின்ஸ்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை