“பாட் கம்மின்ஸ் தான் புதிய Mr.Cool” ஆஷஸ் 2023 முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வெற்றியை பாராட்டிய விரேந்திர சேவாக்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக சாம்பியன் ஷிப் 2023 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்த கையோடு தற்போது ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது இங்கிலாந்து அணி. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக சாம்பியன் ஷிப் 2023 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்த கையோடு தற்போது ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது இங்கிலாந்து அணி. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 393 ரன்களை எடுத்து டிக்ளேர் கொடுத்தது. அதற்கு பிறகு ஆஸ்திரேலியா 386 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்கை விளையாடிய இங்கிலாந்து தடுமாறி 273 எடுத்த நிலையில் 281 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தடுமாறினாலும் இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 2023 ஆஷஸ் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த தோல்விக்கு முதல் இன்னிங்கில் 78 ஓவர்கள் மட்டுமே கடந்திருந்த நிலையில் இங்கிலாந்து டிக்ளர் கொடுத்தது காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த போட்டியில் வெற்றிபெறுவதற்கு சிறப்பாக விளையாடி சதம் அடித்த கவாஜா முதல் காரணம் என்றால் இரண்டாவது காரணம் ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஏனென்றால் இக்கட்டான சூழ்நிலையில் இரண்டாவது இன்னிங்கில் பொறுப்பான கேப்டனாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளையும் 44 ரன்களையும் விளாசினார்

சேவாக் ட்விட் பதிவு :

என்ன ஒரு ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. நான் சமீப காலங்களில் நான் பார்த்த மிகச்சிறந்த போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளில் இதுவும் ஒன்று. டெஸ்ட் கிரிக்கெட் தான் சிறந்த கிரிக்கெட். குறிப்பாக வானிலையை கருத்தில் கொண்டு முதல் நாள் முடிவதற்குள் இங்கிலாந்து டிக்ளேர் செய்தது துணிச்சலான முடிவு என்றே நான் கருதுகிறேன். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் கவாஜா இரண்டு இன்னிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார்.

மேலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனை பாராட்டிய வீரேந்திர சேவாக் “பேட் கம்மின்ஸ் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மிஸ்டர் கூல் என்றும். போட்டியின் அழுத்தத்தின் கீழ் சிறப்பான ஒரு இன்னிங்கை லியோனுடன் இணைந்து விளையாடிய இந்த பார்ட்னர்ஷிப் நீண்ட காலம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நினைவில் இருக்கும் என்று பாராட்டி பதிவிட்டிருந்தார் சேவாக். இவரோடு உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் நம்பர் ஒன் பவுலரான அஸ்வின் இந்த போட்டியினை கடந்த 2005ஆம் ஆண்டு நடந்த பொடியுடன் ஒப்பிட்டு பேசினார்.

2005ஆம் ஆண்டு நடந்தது :

இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் போட்டியின் போது 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்கில் 407 எடுத்திருந்தது. அதன் போது ஆஸ்திரேலியா முதல் இன்னிங்கில் 308 ரன்கள் எடுத்து இரண்டாவது இங்கிலாந்து அணியை 182 ரன்களில் ஆட்டமிழக்க செய்த நிலையில் இரண்டாவது இன்னிங்கில் 279 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஒருவேளை வந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருத்தால் அந்த வருட ஆஷஸ் தொடரை டிரா செய்திருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை