ஃபைனலில் ஒரு போட்டி போதாது, கொந்தளித்த ரோஹித் ஷர்மாவிற்கு பதிலடி கொடுத்த பாட் கம்மிங்ஸ்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பைனலில் டாஸை வென்ற இந்திய அணியின் ரோஹித் ஷர்மா பந்துவீச முடிவு செய்தார். ஆனால் அது தவறான முடிவு என்று அப்போதே ரசிகர்களும், முன்னாள் முன்னாள் வ

By ·

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பைனலில் டாஸை வென்ற இந்திய அணியின் ரோஹித் ஷர்மா பந்துவீச முடிவு செய்தார். ஆனால் அது தவறான முடிவு என்று அப்போதே ரசிகர்களும், முன்னாள் முன்னாள் வீரர்களும் விமர்சித்தார்கள். இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்கை ஆடிய இந்தியா 296 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு 446 ரன்கள் என்ற இமாலய இலக்கை வைத்தது. இந்த இலக்கை துரத்த களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்க்கில் பெரும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி 50 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டமிழந்தார்கள்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சிதான் காரணம் என்று பலவிதமான கருத்துகள் ஷோசியல் மீடியாவில் பரவியது. அப்படிப்பட்ட நிலையில் தான் போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த ரோஹித் ஷர்மா போட்டி பார்மட் குறித்து பேசினார், ஆனால் அதனை தொடர்து கோப்பையை வென்ற பாட் கம்மிங்ஸ் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டி கொடுத்தார்.

ரோஹித் சர்மா கூறியது :

இந்நிலையில் போட்டி முடிந்ததும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் ஷர்மா கூறுகையில் ” கடந்த 2 வருடங்களாக எங்களுடைய அணி கடுமையான விளையாடி வருகிரியாது, குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா போன்ற அணிகளை வென்றோம். எனவே எங்களுக்கு கிடைத்த நேரத்தில் தயாராகினோம். ஜூன் மாதத்தில் மட்டுமே டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது நடக்க கூடாது. அதே போல இங்கிலாந்தில் மட்டுமே நடப்பதை விட அணைத்து இடங்களிலும் நடக்க வேண்டும்.

மேலும் 2 வருடங்களாக உழைத்து வரும் அணி பைனலில் 3 போட்டிகளில் விளையாடினாள் தான் சரியாக இருக்கும் என்று ரோஹித் ஷர்மா கூறினார். ஆனால் டாஸ் வென்று பேட்டிங்கிற்கு பதிலாக பைனலில் பௌலிங் போட்டது. உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பவுலரான அஸ்வினை பைனலில் எடுக்காமல் விட்டது, சரியாக விளையாடாதது போன்றவற்றை மறக்கவும், தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் ரோஹித் இப்படி சொல்கிறார் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

பாட் கம்மிங்ஸ் பதிலடி :

அப்படிப்பட்ட நிலையில் தான் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் வெற்றியாளராக அஸ்தியிலியாவின் கேப்டன் பாட் கம்மிங்ஸ் ரோஹித் சேமாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் ” நாங்கள் ஏற்கனவே உலக சாம்பியன் ஷிப் கோப்பையை வென்று விட்டோம். எனவே 3 போட்டிகளில் அல்ல 16 போட்டிகளாக இருந்தாலும் அதிலும் வெல்வோம். அப்படிப்பட்ட உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் தொடரிலேயே பைனலில் ஒரு போட்டி தான் நடக்கும் என்று ரோஹித் சர்மாவுக்கு பதிலடி கொடுத்தார் பாட் கம்மிங்ஸ்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை