வீடியோ : இங்கிலாந்தின் நிலைமையை பார்க்க வருத்தமாக இருக்கு – பாட் கம்மின்ஸ் கொடுத்த ஆச்சரிய பதில்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2023காண உலகக் கோப்பை ஆனது தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 25வது போட்டியில் நேற்று இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இங்கிலாந்து அணி கடைசியாக நடைப

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2023காண உலகக் கோப்பை ஆனது தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 25வது போட்டியில் நேற்று இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இங்கிலாந்து அணி கடைசியாக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அவர்களுக்கு இந்த வருட உலக கோப்பையானது சரியாக வரவில்லை.

கடந்த இரண்டு போட்டிகளில் இருந்து தோல்வியிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகின்றது. கடந்த போட்டியில் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியிடம் மாபெரும் தோல்வியை அடைந்தது. இந்நிலையில் இலக்கியுடன் மோதிய இங்கிலாந்து அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அதாவது இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது

157 ரன்கள் இலக்காக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி வாய்ப்பு தேடித் தந்தனர். இதனால் நடப்பு சாம்பியன் ஆனா இங்கிலாந்து தற்போது அரையிறுதிக்கு வெல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது. மேலும் வரும் 29ஆம் தேதி நடக்க இருக்கும் இந்தியா vs இங்கிலாந்து போட்டிக்கு பிறகு இவர்கள் உலக கோப்பை அரையிறுதிக்கு செல்வார்களா என்பதை கணித்து விடலாம்.

இதுமட்டுமல்லாமல் வரும் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் நடக்க இருக்கும் உலக சாம்பியன் டிராபியில் பங்குபெற வேண்டுமாயின் தற்போது உலக கோப்பை புள்ளி பட்டியலில் முதல் 8 இடத்திற்குள் வர வேண்டும். ஆனால் நடப்பது உலக கோப்பை சாம்பியன் இங்கிலாந்து 9வது இடத்தில் இருப்பதினால் அவர்கள் 8 இடங்களுக்குள் வர போராடி வருகிறது.

இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இடம் செய்தியாளர் ஒருவர் இங்கிலாந்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் “கடந்த இரண்டு போட்டிகளை பார்க்கையில் இங்கிலத்தின் நிலைமை சோகமாகத்தான் தெரிகிறது. நான் இதற்கு மேல் எது சொல்ல முடியாது என்று சிரித்துக்கொண்டே கூறினார் பாட் கம்மின்ஸ் இது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை