270 ரன் எடுக்கனும்னு விளையாடல.. வரலாற்று வெற்றிக்கு பிறகு பாட் கம்மின்ஸ் மாஸ் பேச்சு.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 திருவிழா மார்ச் 22 முதல் நடைபெற்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை செய்தது. இந்தப் போட்டியானது ஹைதரா

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 திருவிழா மார்ச் 22 முதல் நடைபெற்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை செய்தது. இந்தப் போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இண்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெறது. இதற்கு முன்பு ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியிடம் தோல்வியையும் அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்து களமிறங்கியது.

இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி புள்ளி பட்டியலில் முதல் வெற்றியைப் பெற்று முன்னேறுவார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் அதுவே அவருக்கு மிகவும் தவறான முடிவாக மாறியது. மும்பை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பம் முதலே சோதனையாக முடிவு வரை இருந்தது. 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 277 ரன்களை குவித்தது.

இது ஐபிஎல் வரலாறு மிக அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த இமாலய இலக்கை எதிர்க்க களமிறங்கிய மும்மை அணியின் பேட்ஸ்மேன்கள் திலக் வர்மா, டிம் டேவிட் போன்றவர்கள் கடுமையாக முயற்சி செய்து அவர்களால் 277 என்ற இமாலய இலக்கை எட்ட முடியாமல் 5 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியது பின்வருமாறு..

இந்த போட்டியில் பந்து சுற்றிக்கொண்டிருந்தது நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. அது நாங்கள் பந்து வீசும் வரை இல்லை. இதனால் எங்களுக்கு ரன்களை அடிக்க வசதிக்காக இருந்தது என்றே சொல்லலாம். அவர்கள் தேவைப்படும் போதெல்லாம் ஒரு எல்லையைக் கண்டுபிடித்து பவுண்டர்களை அடித்தார்கள், ஆனால் நாங்கள் அதை நன்றாக முடித்தோம். அபிஷேக் ஷர்மா சிறப்பாக விளையாடினார். ஐபிஎல்லில் நீங்கள் அதிக அழுத்தத்துடன் விளையாடுகிறீர்கள், ஆனால் அவர் மிகுந்த சுதந்திரத்துடன் விளையாடுகிறார்.

முதல் இன்னிங்ஸில் உள்ள திட்டங்களில் நாங்கள் 270 ரன்கள் எடுக்க வேண்டும் என்று விளையாடவில்லை. ஆனால் நாங்கள் ஆக்ரோஷமாக இருக்க விரும்பினோம். அதனால் அப்படியே பேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். இது ஒரு நல்ல விக்கெட், எங்களுக்கு சில பவுண்டரிகள் கிடைக்கும் என்று முடிந்த அளவு உறிஞ்சி வீட்டோம். முக்கிய விஷயம் என்னவென்றால். தெளிவான திட்டங்களை வைத்திருப்பதுதான். எங்களுடைய மைதானத்தில் அற்புதமான சூழ்நிலை இருந்தது. அளவிற்கு சத்தமாக இருந்தது என்றார் பாட் கம்மின்ஸ்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை