எங்க இடத்திற்கு வாங்க.. சரவெடி இருக்கு – தோல்விக்கு பிறகு பாட் கம்மின்ஸ் சவால்.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக தொடக்கி நாடுகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று புள்ளிபட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் ஹைதராபாத் அணியும். மோசமாக கீழே இருக்கும் மும்பை அணியும் மோதியது. இலப்பத்ற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் மும்பை அண

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக தொடக்கி நாடுகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று புள்ளிபட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் ஹைதராபாத் அணியும். மோசமாக கீழே இருக்கும் மும்பை அணியும் மோதியது. இலப்பத்ற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் மும்பை அணி விளையாடினாலும் அவர்களுக்கு புத்துணர்ச்சி தர வெற்றி தேவைப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் டாஸை வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி பவர் பிளே ஓவர்களில் ஒப்போதும் போல விளையாடி இருந்தாலும் ஆறாவது வது ஓவரில் பும்ரா அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு பிறகு விக்கெட்கள் மளமளவென விழுக ஆரம்பித்தது.நிலையாக நின்று விளையாடிய டேவிஸ் ஹெட் 30 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷான் 9 ரன்களில் ஆட்டமிழக்க அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஒரு விக்கெட் விழுந்த நிலையில் அப்போது களமிறங்கி அதிரடி காட்ட ஆரம்பித்த சூரியகுமார் யாதவ் அற்புதமாக விளையாடி தனி மனிதனாக மும்பை அணியை வெற்றி பாதைக்கு 17.2 ஓவர்களிலேயே அழைத்து சென்றார். இதன் போது சூர்யா 51 பந்துகளில் 102 ரன்களை அடித்திருந்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசுகையில் :ஒருவேளை கொஞ்சம் குறைவான எண்ணிக்கையில் ஷாட்டுகளை விளையாடினோம். வான்கடேவில் நீங்கள் எவ்வளவு ரன்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம். நீங்கள் எப்பொழுதும் உள்ளே இருப்பது போல் உணர்கிறீர்கள், விக்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பந்துவீசுக்கு ஒத்துழைப்பு இருந்தது. அதனால் நாங்கள் நிச்சயமாக விளையாட்டில் இருந்தோம். 150 க்கு பதிலாக 170 ரன்களை எட்டுவதற்கு சன்விர் எங்களுக்கு உதவினார் என்று நினைக்கிறேன்.

எங்களிடம் பந்துவீச்சாளர் இருக்கிறார். அவரை இம்பேக்ட் பிளேயராக கொன்வந்தாலும் மற்றம் ஏற்பட்டிருக்காது. இது ஒரு டி20 கிரிக்கெட் என்பதால் எப்போதும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மும்பை அணியில் சூரியகுமார் யாதவ் நன்றாக விளையாடினார். அடுத்த எங்களது மைதானத்தில் விளையாடுவதை எட்டிப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம். ஒருவேளை இன்னும் சில வானவேடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என்றார் பாட் கம்மின்ஸ்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை