நான் அவங்க பேட்டிங் பார்த்து பயந்துட்டேன். தோனி பாய் வந்து என்கிட்ட இதை தான் சொன்னாரு அதை தான் நான் செய்தேன் – பத்திரனா பேச்சு

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 29ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்ப

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 29ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது. அதில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து206 ரன்களை குவித்தது. ரஹானே ஆரம்பத்தில் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் ரச்சின் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தார்.

அதன் பின் ருதுராஜ் சிறப்பாக அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 69 ரன்களை குவித்து இருந்தார் அதில் 5 சிக்சரும் 5 பவுண்டரிகளும் அடங்கும். ஆனால் அதன் பின் வந்த மிட்சல் சற்று நிதனகமாக விளையாடஅணிக்கு அந்த நேரத்தில் ரன்கள் பெரிய அளவில் வரவில்லை. இருப்பினும் மிட்சலுக்கு முன்னதனாகவே துபே ருதுராஜ் உடன் இணைந்து அவரும் ரன்களை குவித்து இருந்தார்.மிட்சல் ஆடமிழந்ததற்க்கு பின் அனைத்து ரசிகர்களும் எதிர்பாத்து கொண்டு இருந்த தல தோனி களமிறங்கினார். அவர் வந்த போது 20வது ஓவரை மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசி இருந்தார்.

அந்த ஓவரில் தோனி ஆடிய நான்கு பந்துகளில் 6,6,6,2 என அந்த ஓவரை சிறப்பாக அடித்து இருப்பார். அவருக்கு 42 வயது என்றால் யாரும் நம்ப கூட மாட்டர்கள். அந்த அளவிற்கு அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. துபே 38 பந்துகளில் 66 ரன்களை அவர் குவித்து இருந்தார். அதில் 10 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். அதன் பின் பேட்டிங் செய்த மும்பை அணி ஆரம்பத்சில் அதிரடியாக விளையாடினாலும் அதன் இறுதியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 105 ரன்களும் திலக் வர்மா 31 ரன்களும் இஷான் கிஷன் 23 ரன்களையும் அடித்து இருந்தார்.

எனவே சென்னை அணி 20 ரன்கள் வித்தியாத்தில் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணி சார்பில் பத்திரனா நான்கு விக்கெட்டுகளையும் ரஹ்மான் அம்ற்றும் தேஷ் பாண்டே தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இந்த வெற்றி சென்னை அணியின் 150 வெற்றியாகும். அது மட்டுமல்லாமல் இது சென்னை அணிக்காக தல தோனியின் 250வது வெற்றியாகும். இதில் சென்னை அணியி வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால் இருந்தியாக வந்து தல தோனி அடிந்த அந்த 20ரன்கள் தான் என்று கூறலாம். இந்த ஐபிஎலில் வெளி மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி

போட்டி குறித்து பத்திரனா கூறுகையில், நாங்கள் பவர்பிளேயில் பந்துவீசும்போது, ​​நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். அமைதியாக இருந்து என் காரியத்தைச் செய்யச் சொன்னது தோனி பாய் தான். அது இன்று எனக்கு நம்பிக்கையைத் தந்தது. நான் முடிவுகளைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை, எனது டெத் ஓவரை பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் ஒரு சிறிய குழப்பத்துடன் போராடிக்கொண்டிருந்தேன், ஆனால் ஆதரவு ஊழியர்கள் அனைவரும் என்னை ஆதரித்தனர், எனவே சிறப்பால் செயல் படமுடிந்தது என்றும் அவர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை