பிழைப்பதற்கு உணவு டெலிவரி – தென்னாபிரிக்க அணி வீரரின் வைரலான பழைய ட்விட் பதிவு.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர்.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் இரண்டு வெற்றியில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது.
நேற்று தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்க அணி முதலில் பவுலிங் செய்ய விரும்பியது. மழையின் காரணமாக போட்டியானது 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்ச எட்வர்ட்ஸ் 78 ரன்களும் வான் டெர் மெர்வே 29 ரன்களும் ஆரியன் தட் 23 ரன்களையும் குவித்தனர்.
இதனையடுத்து 43 ஓவர்களில் 246 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கம் இருந்தாலும் போகப்போக அந்த தொடக்கத்தை அந்த அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்ச ரன்களாக டேவிட் மில்லர் 43 ரன்களும் க்ளாசண் 28 ரன்களும் கோட்சி 22 ரன்கள் மட்டுமே அடித்தனர். 42.5 ஓவரில் அணைத்து விக்கெட்களையும் இழந்து உங்களை 207 மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் நெதர்லாந்து அணி சுலபமான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் நெதர்லாந்து வலது கை வேகபந்து வீச்சாளர் பால் வான் மீக்கரன் தென்னைப்பிரிக்க அணியின் முக்கிய விக்கெட்டுகளான எய்டன் மார்க்ரம் மற்றும் மார்க்கோ ஜான்சன் ஆகியோரது விக்கட்டையும் வீழ்த்தி நெதர்லாந்து அணி வென்றியடைய முக்கிய காரணமாக இருந்தார்.
Should’ve been playing cricket today 😏😢 now I’m delivering Uber eats to get through the winter months!! Funny how things change hahaha keep smiling people 😁 https://t.co/kwVEIo6We9
— Paul van Meekeren (@paulvanmeekeren) November 15, 2020
இந்நிலையில் தான் பால் வான் மீக்கரன் கடந்த 2020 ஆம் ஆண்டின் போது பதிவிட்ட ட்விட் பதிவு ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 2020ஆம் ஆண்டின் போது கொரோன என்ற கொடிய நோய் உலகம் முழுவதும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பல நாட்டு கிரிக்கெட் அணிகள் பொருளாதார ரீதியிலான சிக்கலில் சிக்கியது. குறிப்பாக நெதர்லாந்து போன்ற நாடும் இது போன்ற சூழ்நிலையில் சிக்கியது.
இதனை போதுதான் நெதர்லாந்து ஐயின் பால் வான் மீக்கரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “இன்று கிரிக்கெட் விளையாடியிருக்க வேண்டும். இப்போது குளிர்காலத்தை கடக்க உணவுகளை டெலிவரி செய்து வருகிறேன். வேடிக்கையான விஷயங்கள் எப்படி மாறுகின்றன, ஹாஹாஹா மக்கள் சிரித்துக் கொண்டே இருங்கள் என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.