தொடர் தோல்வியில் டெல்லி – இந்த சீசனில் இப்படி அடிவாங்க என்ன காரணம்?
ஐபிஎல் 2023தொடரில் 59 வது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்கமே சரியாக இல்லாமல் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அதற்
ஐபிஎல் 2023தொடரில் 59 வது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்கமே சரியாக இல்லாமல் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு களமிறங்கிய லிவிங்ஸ்டனும் 4(5) ரன்களில் ஆட்டமிழக்க பிரப்சிம்ரன் சிங் தனி ஒருவராக ஆடிக்கொண்டிருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிதேஷ் சர்மா 5(5) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய சாம் கரண் பொறுமையாக விளையாடினார். ஆனால் 31 பந்துகள் பொறுமையாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் அதற்கு பிறகு அதிரடியாக ஆட ஆரம்பித்தார். சிக்ஸர்களையும் 4 களையும் பிரப்சிம்ரன் சிங் பறக்கவிட மறுபுறம் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகளை விழுந்த வண்ணமாக இருந்தது.
இருந்த போதிலும் பிரப்சிம்ரன் சிங்கை ஆட்டமிழக்க செய்ய டெல்லி அணியால் முடியவில்லை. இந்நிலையில் 42 பந்துகளில் பிரப்சிம்ரன் சிங் அரை சதம் விளாசினார். அதற்கு பிறகு அதிரடியாக ஆடிய 61 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் விளாசி 103 ரன்களை எடுத்தார் பிரப்சிம்ரன் சிங் இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தனர் பஞ்சாப் கிங்ஸ் அணி.
டெல்லி பேட்டிங் :
இந்நிலையில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது. டேவிட் வார்னர் அரைசதம் அடிக்க, பில் சால்ட் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். வார்னர் 27 பந்துகளில் 1 சிக்ஸர்-10 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார்.
ஆனால் துரதிஷ்ட வசமாக டேவிட் வார்னர் ஆட்டமிழந்த பிறகு டெல்லி அணியில் எந்த பேட்ஸ்மேனும் சரியாக பேட் செய்ய முடியாமல் ஒவ்வொருவராக பெவிலியன் திரும்பினர். இறுதியில் குல்தீப் யாதவ் 10 ரன்னுடனும், முகேஷ் குமார் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் ஹர்பிரீத் ப்ரார் 4 விக்கெட்டுகளையும், ராகுல்-நாதன் 2-2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.