IPL 2033 டாஸை வென்ற KKR பந்துவீச்சு| வித்தியாசமான சாதனை படைத்துள்ள பஞ்சாப்! வெற்றி யாருக்கு?

ஐபிஎல் 2023 திருவிழா : அனைத்து இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த, ஐபிஎல் 2023 திருவிழா நேற்று இரவு அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.தொடக்க விழாவை சிறப்பிக்கும் வகையில் நடிகைகள் ரஷ்மிகா மந்தனா மற்றும் தமனா ஆகியோர் பங்கேற்று நடனம

By ·

ஐபிஎல் 2023 திருவிழா :

அனைத்து இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த, ஐபிஎல் 2023 திருவிழா நேற்று இரவு அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.தொடக்க விழாவை சிறப்பிக்கும் வகையில் நடிகைகள் ரஷ்மிகா மந்தனா மற்றும் தமனா ஆகியோர் பங்கேற்று நடனம் ஆடியும், பாடகர் அர்ஜித் சிங் பாடல்களை பாடியும் ஐபிஎல் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

ஐபிஎல் முதல் போட்டி :

ஐபிஎல் 2023 தொடக்க விழா நடன நிகழ்ச்சிகளும் பாடல் நிகழ்ச்சிகளுடனும் தொடங்கின அதில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணிகள் ஆடின. முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நிர்ணயிக்க பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது. பிறகு 179 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 182 ரன்களை எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்று நடக்கவிருக்கும் போட்டி :

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் இன்று மோத உள்ளன. இந்த போட்டியானது இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பஞ்சாப் மைதானத்தில் நடைபெறபோகின்றது. இதில் இரு அணிகளும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது .பஞ்சாப் கிங்க்ஸ் பஞ்சாப் கிங்க்ஸ் அணியனது இது வரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை இந்த வருடம் பஞ்சாப் கிங்க்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் இருக்கிறார்.

பஞ்சாப் செய்திருக்கும் சாதனை :

பஞ்சாப் கிங்க்ஸ் அணியானது ஒரு விசித்திரமான சாதனையை படைத்துள்ளது.அந்த சாதனை என்னவென்றால் ஐபிஎல் வரலாற்றில் “அதிக முறை கேப்டன்களை மாற்றிய அணி என்ற விசித்திர சாதனையை “படைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொல்கத்தா அணியின் முன்னணி வீரர் மற்றும் கேப்டனாக இருந்த ஷிரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகினார்.அவருக்கு பதிலாக கொல்கத்தா அணியின் வீரரான நிதிஷ் ரானா அவர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டர்.

KKR கேப்டன் :

அணியின் முன்னணி வீரகளான ரசல்,நரேன் உள்ளிட்டோர் உள்ளபோது அவருக்கு ஏன் கேப்டன் பதவி என்ற சலசலப்பு ஏற்பட்டது .நிதிஷ் ரானா சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “நான் ரோஹித் மற்றும் தோனியின் அவர்களின் வழியை பின்பற்ற மாட்டேன் “ எனவும் “அவ்வாறு பின்பற்றினால் அது என்னுடைய தனி தன்மையை இழந்து விடுவேன் “ என அவர் பெட்டி அளித்தார் .இதனை அறிந்த தோனி மற்றும் ரோஹித் சர்மா ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர் .

கணிப்பு :

இன்று வெற்றி வாய்ப்பு யாருக்கு? இன்று நடக்கவிருக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்களிடம் மேற்கொண்ட கருத்து கணிப்பின் படி பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பு என கூறப்பட்டு வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை