“ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் சர்ச்சை”மைதானம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ICCயிடம் புகார் அளித்த PCB.

pcb தற்போது iccயிடம் இந்திய ரசிகர்கள் குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்த

By ·

pcb தற்போது iccயிடம் இந்திய ரசிகர்கள் குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.

இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். அந்த போட்டியில் இந்திய அணியின் ரசிகர்கள் ரிஸ்வான் விக்கெட்டுக்கு பிறகு இந்திய ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷங்களையிட்டனர். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீகழ்விற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

PCB புகார்:

இந்த நிகழ்வுக்கு PCB ஐசிசியிடம் இந்த நிகழ்வு குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளது. அதில் இது போன்ற நிகழ்வுகள் மைதானத்தில் நடந்தால் அங்கு எதிரணியின் வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டு வைத்துள்ளது . அந்தப் புகாரை மனுவை ஐசிசி ஏற்றுக்கொண்டு இவர் விசாரணை நடத்தும் எனவும் தெரிவித்துள்ளது. விசாரணை நடத்தி ஐசிசி அந்த மைதானத்தில் சில காலத்திற்கு போட்டிகளை நடத்தாமல் தடை செய்யவும் முடியும் என்றும் கூறுகின்றனர்.

மேலும் வீரர்களுக்கு பாதுகாப்பாற்ற மைதானம் என்ற பட்டியலிட்டு சர்வதேச போட்டிகளை அங்கு நடக்காமல் கணிக்க முடியும் என்றும் பாகிஸ்தான் வீரர்களிடம் மட்டுமே நடந்து கொண்ட ரசிகர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் ஐசிசி பிசிசிஐயிடம் அறிக்கைகளும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அகமதாபாத்தில் தான் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளதால் பாகிஸ்தான் அணி தற்போது அளித்துள்ள புகார் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அணி வென்று இறுதிப் போட்டிக்கு வந்தால் அகமதாபாக்கில் விளையாட மாட்டோம் என்று போர்கோடி தூக்கினால் அது மீண்டும் பிசிசிஐ க்கு பெரும் தொந்தரவுவாக இருக்கின்றது. icc என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை