WTC இறுதிப் போட்டிக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு உள்ள பிளேயிங் 11 வீரர்கள்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐபிஎல் 2023 முடிவிற்குப் பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் விளையாடுகிறது. இந்தியா அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக WTC இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்ததுள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா அணி முதல் முறையா

By ·

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐபிஎல் 2023 முடிவிற்குப் பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் விளையாடுகிறது. இந்தியா அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக WTC இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்ததுள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. காயம் அடைந்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் பும்ரா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை, நீண்ட நாட்களுக்கு பிறகு ரஹானே இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

WTC இறுதிப் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் மீண்டும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டு வருகிறது. சுப்மான் கில் தற்போது அருமையாக விளையாடி கொண்டு வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கில்லின் புள்ளி விவரங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் 9 இன்னிங்ஸில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 51.62 சராசரியுடன் 413 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலும் அணிக்கு வேகமான தொடக்கத்தை கொடுப்பதில் அனுபவம் பெற்றவர். கடந்த பல போட்டிகளில், அணிக்காக வேகமாக ரன்களை குவித்த ரோஹித், சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் அற்புதமான சதம் அடித்துள்ளார். மேலும் இங்கிலாந்தில் ரோஹித் 12 இன்னிங்ஸ்களில் 42.36 சராசரியில் ஒரு சதம் உட்பட 466 ரன்களை எடுத்துள்ளார்.

சேதேஷ்வர் புஜாரா, அணியில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில், புஜாராவும் ஒருவர் இவர்  5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2033 ரன்கள் எடுத்துள்ளார், ​​இவர் 50.82 சராசரியில் ரன்களை எடுத்துள்ளார், இது அணியின் வெற்றியில் மிகவும் முக்கியமானது. நான்காம் இடத்தில் விராட் கோலியை விட சிறந்த வீரர் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48க்கும் அதிகமான சராசரியில் 1979 ரன்கள் எடுத்ததன் மூலம், கோலி இறுதிப் போட்டியில் வெற்றிக்கு முக்கியமான வீரராக நிரூபிக்கப் போகிறார்.ஐந்தாவது இடத்தில் மீண்டும் அணிக்கு திரும்பிய ரஹானே, ஸ்ரேயர்ஸ் ஐயரின் காயம் காரணமாக இவர் அணியில் மிடில் ஆர்டரில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல்லில் தனதுசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் இடம்பிடித்துள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில், அவரது அணிக்கு மீண்டும் ஒரு பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது. 6வது இடத்தில், கேஎல் ராகுலை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகக் களமிறங்க வாய்ப்புள்ளது. ரவீந்திர ஜடேஜா ஆல்-ரவுண்டராக 7-வது இடத்தையும், ஷர்துல் தாக்கூர் 8-வது இடத்தையும் பேட்டிங்கிற்கு அனுப்பலாம். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில், இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஷமி அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளராக உள்ளார். ஷமியைத் தவிர, முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் வீரர்களை தங்கள் வேகத்தால் பயமுறுத்தும் அணியில் காணப்படுவார்கள்.

சிராஜின் சமீபகால ஆட்டத்தை பார்த்தால், அவர் விளையாடும் 11-ல் இடம் பெறுவது உறுதியாகி விட்டது என கூறி வருகின்றனர். அதே சமயம், பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கக்கூடிய ஷர்துல் தாக்கூருக்கு அணியில் ஆல்ரவுண்டராக வாய்ப்பு அளிக்ப்படலம் எனவும், இங்கிலாந்து ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சு உதவாது, ஆகையால் சில போட்டிகளில் அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாது எனவும் கூறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜாவுடன் மட்டுமே இந்திய அணி களமிறங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜடேஜா இந்திய அணியில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் என்பதை யாரும் மறுக்க முடியாத ஒன்று.

ப்ளேயிங் 11  விளையாட வாய்ப்பு உள்ள வீரர்கள்

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ். ஆகியோர் மட்டுமே விளையாட வாய்ப்பு உள்ளது எனவும் கூறுகின்றனர்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை