இந்த பனியில் விளையாடுவது ரொம்ப கஷ்டமா இருந்துச்சி இருந்தாலும் நாங்க அதை செய்து இருக்க வேண்டும் – இப்ராஹிம் சத்ரான்.

இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் நேற்று முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந

By ·

இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் நேற்று முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந்த தொடருக்கு இந்திய அணியின் முன்னனி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா 14 மாதங்களுக்கு பின் T20 இந்திய அணியில் அவர் இணைந்துள்ளார்.

இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறிய நிலையில் இந்த தொடரில் ரோஹித் ஷர்மா கேப்டனாக இந்திய அணியை வழி நடத்த உள்ளார். இதில் முதல் தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்து இருந்தது. இந்த மைதானத்தில் பனி சற்று அதிகமாக இருந்ததால் வீரர்களுக்கு போட்டி சற்று கடினமாகவே தான் இருந்தது. ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரில் எந்த ரன்னையும் அடிக்கவில்லை.

அதன் பின் நிதானமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்களை குவித்து இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்களும் ஓமர்சாய் 29 ரன்களும் மற்றும் சார்டன் 25 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் சிவம் துபே 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தி இருந்தார்.

159 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை பெற்று வெற்றி பெற்றது. இந்திய அணியின் அதிகபட்சமாக ஷிவம் துபே 60 ரன்களும் ஜிதேஷ் ஷர்மா 31 ரன்களும் திலக் வர்மா 26 ரன்களும் எஅடித்து இருந்தனர். இறுதியில் வந்து ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டு 9 பந்துகளில் 16 ரன்களையும் அவர் அடித்து இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும் ஓமர்சாய் 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தி இருந்தார். எனவே இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் கூறுகையில்,

நாங்கள் 13-15 ரன்கள் குறைவாக இருந்தோம். டாஸ்ஸிலும் தோற்றோம். ஆனால் வீரர்கள் நன்றாகப் போராடினார்கள். நாங்கள் ஒரு நல்ல பவர்பிளே தொடக்கத்தைப் பெற முயற்சித்தோம், ஆனால் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். எங்களில் ஒருவர் 14-15 ஓவர்களுக்குச் சென்றிருக்க வேண்டும் ஆனால் நாங்கள் மீண்டும் விக்கெட்டுகளை இழந்தோம். புதிய பேட்டர்கள் வந்தபோது, ​​நாங்கள் அழுத்தத்திற்கு ஆளானோம். இரண்டாவது இன்னிங்ஸில் பனி இருந்தது மற்றும் பந்தை பிடிப்பது கடினமாக இருந்தது.

வீரர்கள் நன்றாக முயற்சி செய்தார்கள் என்று என்னால் சொல்ல முடியும். நாங்கள் எங்கள் பீல்டிங்கை மேம்படுத்த முயற்சிப்போம். இன்று பீல்டிங்கில் நாங்கள் மிகவும் சோம்பேறியாக இருந்தோம். பேட்டிங்கையும் மேம்படுத்த முயற்சிப்போம். பந்துவீசுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்று நாம் என்ன தவறு செய்தோம் என்பதில் கவனம் செலுத்துவோம் என்றும் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் சார்தன் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை