தொடக்கத்தில் பொறுமையாக ஆட காரணம் இதுதான் – வெற்றிக்கு பிறகு பேசிய பிரப்சிம்ரன் சிங்
ஐபிஎல் 2023தொடரில் 59 வது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்கமே சரியாக இல்லாமல் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அதற்
ஐபிஎல் 2023தொடரில் 59 வது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்கமே சரியாக இல்லாமல் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் 31 பந்துகள் பொறுமையாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் அதற்கு பிறகு அதிரடியாக ஆட ஆரம்பித்தார். சிக்ஸர்களையும் 4 களையும் பிரப்சிம்ரன் சிங் பறக்கவிட மறுபுறம் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகளை விழுந்த வண்ணமாக இருந்தது. இருந்த போதிலும் 42 பந்துகளில் பிரப்சிம்ரன் சிங் அரை சதம் விளாசினார். அதற்கு பிறகு அதிரடியாக ஆடிய 61 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் விளாசி 103 ரன்களை எடுத்தார் பிரப்சிம்ரன் சிங்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தனர் பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்நிலையில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றாலும் அதற்கு பிறகு மிகவும் மோசமாக விளையாடிய நிலையில் அதிகபட்சமாக டெல்லி அணியில் வார்னர் மட்டுமே சிறப்பாக விளையாடி 27 பந்துகளில் 1 சிக்ஸர்-10 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார்.
பிரப்சிம்ரன் சிங் கூறியது :
இறுதியில் பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் கூறுகையில் “ஆரம்பத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம், எனவே ஆட்டத்தை கொஞ்சம் ஆழமாக கொண்டு செல்வதே எங்கள் திட்டமாக இருந்தது. நான் நீண்ட காலமாக அணியுடன் இருக்கிறேன், உங்களுக்கு அடிக்கடி வாய்ப்புகள் கிடைக்கும்போது, அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Prabhsimran Singh won the Player of the Match award for his terrific hundred.
— Johns. (@CricCrazyJohns) May 13, 2023
Indian Youngsters in IPL 2023 🔥 pic.twitter.com/Zgp8DwEvsl
ஆரம்பத்தில் விக்கெட் சற்று கடினமாக இருந்தது எனவே சில பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி பின்னர் சில பந்துவீச்சாளர்களை குறிவைப்பதுதான் என திட்டம் தீட்டினோம். நான் மூத்த வீரர்களிடமும் பேசினேன். அவர்கள் விளையாட்டை ஆழமாக எடுத்துச் செல்லவும், நான் அடிக்க ஆரம்பித்த பிறகு நிறுத்தாமல் தொடர்ந்து அடிக்கவும் எனக்கு அறிவுரை கூறினார்கள்.
— Ninja (@IPLcskMSD) May 14, 2023
அப்படி வாய்ப்பளித்த நிர்வாகத்திற்கு உண்மையிலேயே நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார் பிரப்சிம்ரன் சிங். மேலும் இந்தப் போட்டியில் பிரப்சிம்ரன் சிங் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை விளாசியது குறிப்பிடத்தக்கது. அவர் 65 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் எடுத்தார். இதனால் தான் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.