16 பவுண்டரிகளை விளாசி தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்த பிரபாசிம்ரன்.
ஐபிஎல் 2023தொடரில் 59 வது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை முடிவு செய்தார். முதலில் பேட்
ஐபிஎல் 2023தொடரில் 59 வது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை முடிவு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்கமே சரியாக இல்லாமல் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு களமிறங்கிய லிவிங்ஸ்டனும் 4(5) ரன்களில் ஆட்டமிழக்க பிரப்சிம்ரன் சிங் தனி ஒருவராக ஆடிக்கொண்டிருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிதேஷ் சர்மா 5(5) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய சாம் கரண் பொறுமையாக விளையாடினார்.
ஆனால் 31 பந்துகள் பொறுமையாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் அதற்கு பிறகு அதிரடியாக ஆட ஆரம்பித்தார். சிக்ஸர்களையும் 4 களையும் பிரப்சிம்ரன் சிங் பறக்கவிட மறுபுறம் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகளை விழுந்த வண்ணமாக இருந்தது. இருந்த போதிலும் பிரப்சிம்ரன் சிங்கை ஆட்டமிழக்க செய்ய டெல்லி அணியால் முடியவில்லை. இந்நிலையில் 42 பந்துகளில் பிரப்சிம்ரன் சிங் அரை சதம் விளாசினார்.
Take a bow, Prabhsimran Singh!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 13, 2023
First 31 balls – 27 runs.
Last 34 balls – 76 runs.
– 103 in 65 balls with 10 fours and 6 sixes. The next best scorer for PBKS is 20, a one man show by Prabhsimran. pic.twitter.com/3aAVTKm87u
அதற்கு பிறகு அதிரடியாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் இந்த போட்டியில் அற்புதமாக பேட்டிங் செய்து தனது முதல் ஐபிஎல் சதத்தை எடுத்தார். மேலும் 61 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் விளாசி 103 ரன்களை எடுத்தார் பிரப்சிம்ரன் சிங். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தனர் பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்நிலையில் தனி ஆளாக பஞ்சாப் அணிக்கு ரன்களை எடுத்த பிரப்சிம்ரன் சிங்கை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Relive that special 💯 moment here 🔽#TATAIPL | #DCvPBKS https://t.co/eBGUL8gkVh pic.twitter.com/uWI2uW8vB8
— IndianPremierLeague (@IPL) May 13, 2023
இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய டெல்லி அணி தற்போது அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரரான டேவிட் வார்னர் முதல் பந்திலேயே 4 ரன்களை விளாசி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். பில் சால்ட் 7வது ஓவரில் 21(17) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் அதிரடியாக ஆடிவந்த டேவிட் வார்னர் 23 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
மேலும் அதற்கு பிறகு மிட்சல் மார்ஸ் LBWவில் 3ரன்களில் ஆட்டமிழக்க அதற்கு அடுத்த ஓவரே 9வது ஓவரின் இரண்டாவது பந்தில் ரிலீ ரோசோவ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் இந்த செய்தியை எழுதும் வரையில் டெல்லி அணி 8.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 82 ரன்களை எடுத்துள்ளது.