222 ரன்களை எடுத்தும் தோல்வியை தழுவிய இந்திய அணி. இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிய பிரசித் கிருஷ்ணா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட T20 தொடர்களை விளையாடி வருகின்றது. இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ஈடு கட்டும் வகையில் இந்திய அணி இந்த போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. அதில
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட T20 தொடர்களை விளையாடி வருகின்றது. இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ஈடு கட்டும் வகையில் இந்திய அணி இந்த போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. அதில் இன்றுடன் மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இறண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் இந்திய இன்றைய போட்டியில் தோல்வியை தழுவியது . இன்றைய தொடர் ஆனது அசாம் மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வேட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கட்டுகளை மட்டுமே எழுந்து 222 ரன்களை குவித்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர்களை சிறப்பாக கையாண்டு சிறப்பாக ரன்களை குவித்து வந்தனர்.
அணியின் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்துள்ளார் அதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக விளையாடிக் கொண்டு வந்த ருதுராஜ் அரை சதத்தை பூர்த்தி செய்த கையோடு வேகமாக சதத்தையும் பதிவு செய்து இந்திய அணிக்கு நல்ல இலக்கை எட்ட உதவினார். அதன் பின்பு சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் திலக் வர்மா 31 ரன்கள் சேர்த்து அணிக்கு பலத்தை அளித்தனர். ஆஸ்திரேலியாவின் சார்பில் பந்துவீச்சாளர்கள் ஆரோன் ஹார்டி,ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் தலா ஒரு விக்கெட் களை வீழ்த்தி இருந்தனர்.
223 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் இருந்து தடுமாற்றத்தை சந்தித்து வந்தாலும் இறுதி வரை போராடி ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவு 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 104 ரன்களுக்கும் ஹெட் 35 ரன்களும் வேட் 28 ரன்களை குவித்திருந்தனர்.
எனவே ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னாய் இரண்டு விக்கெட்களையும் ஆவேஷ் கான் அக்சர் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தனர். மேக்ஸ்வெல் கடைசி வரை போராடி இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் பிரசித் கிருஷ்ணா தான் என்று பல ரசிகர்கள் அவரை சாடி வருகின்றனர். அவர் வீசிய 4 ஓவரில் 68 ரன்களை வாரி வழங்கினார் ஒரு விக்கெட்டை கூட அவர் எடுக்க வில்லை. கடைசி ஓவரில் அவர் ஒரு யார்க்கர் பந்து கூட வீசவில்லை என்றும் அவருக்கு அழுத்தத்தை கையாள முடியவில்லை என்று பலர் அவரை சாடி வருகின்றனர். அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.