இந்த இடத்தில் வேறு வீரர் இருந்து இருந்தால் நம்பிக்கையை இழந்திருப்பார்.. ஆனால் இவர் அப்படி இல்லை – ஷஷாங்க் சிங் குறித்து பீரித்தி ஜிந்தா எக்ஸ் தள பதிவு.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது இந்தியாவில் மார்ச் 22 முதல் தொடர்ந்து தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. ப

By ·

அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது இந்தியாவில் மார்ச் 22 முதல் தொடர்ந்து தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. பஞ்சாப் அணி இதற்க்கு முன் நடந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. அதேபோல் மற்றொரு பக்கம் குஜராத் டைட்டன்ஸ் அணி இது வரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி இருந்தது

இந்த இரு அணிகளும் இன்று போட்டியில் பலப்பரீட்சை செய்வது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் பஞ்சாப் அணியின் அணியின் கேப்டன் ஷிகர் தவன். குஜராத் அணி நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை குவித்து இருந்தது. குஜராத் அணியில் அதிகப்பட்சமாக அணியும் கேப்டன் ஷுப்மான் கில் 48 பந்துகள் 89 ரன்களை எடுத்து விளாசி இருந்தார். அதில் 6 பவுண்டர்களும் 4 சிக்சர்களும் அடங்கும் அதன் பின்பு தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் பத்தொன்பது பண்டிகளில் 33 ரன்களை அவர் அடித்து இருந்தார்ல.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சு சார்பில் சற்று சுமாராக இருந்தது. அதில் ராபடா இரண்டு விக்கெட்டுகளையும் ஹர்ப்ரீத் மற்றும் ஹர்ஷால் படேல் தலா ஒரு விக்கெட்டுகளையும் மட்டுமே வீழ்த்தி இருந்தனர். அதன் பின் 200 இலக்கை கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அணிக்கு ஆரம்பமே சோதனையாக இருக்க கேப்டன் ஷிகர் தவன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த வீர்களும் மிடில் ஆர்டரில் சற்று சொதப்பலாக விளையாடி இருந்தாலும் ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா இணைந்து அணியின் வெற்றிக்கு அருகில் வரை கொண்டு சென்றன.

இந்த போட்டியில் அதிகபட்சமாக ஷஷாங்க் சிங் ரன்களும் அசுதோஷ் சர்மா 31 ரன்களையும் அவர் அடித்து இருந்தனர். குஜராத் அணியின் பந்துவீச்சு பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக இருந்தாலும் மிடில் ஆர்டர் சுமாராகவே இருந்தது. எனவே பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அதில் ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்களை அடித்து அணியின் வெற்றியை பெற்று கொடுத்தார்.இது குறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில் , ஏலத்தில் எங்களைப் பற்றி கடந்த காலத்தில் கூறப்பட்ட விஷயங்களைப் பற்றி இறுதியாகப் பேச இன்று சரியான நாள் போல் தெரிகிறது.

இதேபோன்ற சூழ்நிலைகளில் நிறைய பேர் நம்பிக்கையை இழந்திருப்பார்கள், அழுத்தத்தின் கீழ் வளைந்திருப்பார்கள் அல்லது ஊக்கம் இழந்திருப்பார்கள் .ஆனால் ஷஷாங்க் அல்ல! அவர் பலரைப் போல் இல்லை. அவர் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தவர். ஒரு வீரராக அவரது திறமையால் மட்டுமல்ல, அவரது நேர்மறையான அணுகுமுறை மற்றும் நம்பமுடியாத ஆவி ஆகியவற்றின் காரணமாக. அவர் அனைத்து கருத்துக்கள், நகைச்சுவைகள் அவர் மிகவும் விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொண்டார் & ஒருபோதும் பலியாகவில்லை.அவர் தன்னை ஆதரித்து, அவர் எதை உருவாக்கினார் என்பதை எங்களுக்குக் காட்டினார்,

அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன் அவருக்கு என் பாராட்டும் மரியாதையும் உண்டு. வாழ்க்கை ஒரு வித்தியாசமான திருப்பத்தை எடுக்கும் போது மற்றும் ஸ்கிரிப்ட் படி விளையாடாதபோது அவர் உங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்! எனவே ஷஷாங்க் போல உங்களை நம்புவதை நிறுத்தாதீர்கள் & வாழ்க்கையின் விளையாட்டில் நீங்கள் ஆட்ட நாயகனாக இருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை