IPL 2023யை வெற்றியுடன் தொடங்கிய பஞ்சாப் அணி | மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ப்ரீத்தி ஜிந்தா வைரல் வீடியோ.

பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா போட்டியின் போது செய்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிற்து.பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் இன்று மோதிக்கின்றனர். இந்த போட்டியானது இன்று பஞ்சாப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் கோப்பையை வெல

By ·

பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா போட்டியின் போது செய்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிற்து.பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் இன்று மோதிக்கின்றனர். இந்த போட்டியானது இன்று பஞ்சாப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது .பஞ்சாப் கிங்க்ஸ் பஞ்சாப் கிங்க்ஸ் அணியனது இது வரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை இந்த வருடம் பஞ்சாப் கிங்க்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் இருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொல்கத்தா அணியின் முன்னணி வீரர் மற்றும் கேப்டனாக இருந்த ஷிரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகினார்.அவருக்கு பதிலாக கொல்கத்தா அணியின் வீரரான நிதிஷ் ரானா அவர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டர். அணியின் முன்னணி வீரகளான ரசல்,நரேன் உள்ளிட்டோர் உள்ளபோது அவருக்கு ஏன் கேப்டன் பதவி என்ற சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் 2023ல் இரண்டாவது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆனால் இந்த முடிவு சரியானது என்று நிரூபிக்கப்படவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவரில் 191 ரன்கள் குவித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பஞ்சாப் பேட்ஸ்மேன்கள், அபாரமாக பேட்டிங் செய்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்கினார். பஞ்சாப் அணியில் கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே சமயம் மூன்றாம் இடத்தில் பேட் செய்ய வந்த ராஜபக்சே அபாரமாக அரைசதம் அடித்தார். நான்காம் நம்பரில் பேட் செய்ய வந்த ஜிதேஷ் சர்மா, களம் இறங்கியவுடன் ஏரியல் சிக்ஸர் அடித்தார்.

இந்த சிக்சரைப் பார்த்ததும், டக்அவுட்டில் இருந்த ப்ரீத்தி ஜிந்தா மகிழ்ச்சியுடன் நடனமாடத் தொடங்கினார். ஜிதேஷ் ஷர்மாவின் சிக்ஸரைப் பார்த்துவிட்டு அவரைப் பாராட்டி பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கூறி நடனமாடியுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை