பிரிதிவி ஷாவிற்கு மீண்டும் பிரச்சனை… இந்த சின்ன வயதில் இப்படியே நடந்தால் என்னதான் செய்வார் – ரசிகர்கள் வருத்தம்.

ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். ஏனென்றால் தற்போது கலக்கி வரும் சுப்மன் கில் மற்றும் இ

By ·

ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். ஏனென்றால் தற்போது கலக்கி வரும் சுப்மன் கில் மற்றும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத பிரதிவ் ஷா இருவரும் U19 ஒரே அணியில் தான் இருந்தார்கள்.

U19 உலகக்கோப்பையில் நிசிலாந்து அணியை வீழ்த்திய பிறகு ஆஸ்திரேலியாவை பைனலில் வீழ்த்தியது அந்த அணி. மேலும் அந்த அணிக்கு பிரதிவ் ஷா கேப்டனாகவும், கில் மேன் ஆஃப் தி டோர்னமெண்ட்டாகவும் இருந்தார். இதனால் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றார் கூறப்பட்டது. அதே போன்று ஷா இந்திய அணியில் 2018ஆம் ஆண்டு இணைந்தார். இவருடைய பேட்டிங்கை பார்த்து அடுத்த வீரேந்திர சேவாக் இவர் தான் என்று பலர் கூறினார்.

ஆனால் வெஸ்ட் இன்டிங்ஸ்க்கு எதிரான போட்டிக்கு பிறகு அவருடைய கிரிக்கெட் வாழ்ககை தலைகீழாக மாறி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பிரித்வி ஷா 8 போட்டிகளில் வெறும் 116 ரன்கள் தான் அடித்திருந்தார். அவருடைய பிரச்சினையே அவரினால் வேகமும், ஸ்விங்கும் தான். அதனை பயன்படுத்தி இவரை தொடக்கத்திலேயே அணிகள் ஆட்டமிழக்க செய்து விடுகின்றனர். இப்படி தொடந்து பல அடிகள் விழுவ அவருக்கு இந்திய கிரிக்கெட் தூரமாக சென்றது.

இந்நிலையில் மேலும் அவருக்கு பெரி அடியாக துர்ஹம் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஃபீல்டிங் செய்த போது முழங்காலில் காயத்தை சந்தித்த பிரிதிவி ஷா இந்த தொடரிலிருந்து விலகுவதாக நார்த்தம்டன்ஷைர் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக காயம் சோதிக்கப்பட்டதில் பெரியதாக இருப்பதாக தெரியவந்துதை அடுத்து மருத்துவர்கள் பரிந்துரையின் பெயரில் பிரிதிவி ஷா பாதியிலேயே விலகுவது தங்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளதாக கூறியுள்ளது.

இதன் காரணமாக இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு வந்த அவர் விளையாட முடியாத நிலையில் லண்டனில் இருக்கும் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு திரும்ப உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரிதிவி ஷா இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பாட்டாதி பார்த்த நெட்டிசன்கள் அவர் மீண்டும் அணியில் இணைவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் துரதிஷ்டவசமாக காயமடைந்து வெளியேறியுள்ளார்.

அப்படி ஆரம்பம் முதல் நிறைய சோதனைகளை கடந்து ஒரு வழியாக இந்த தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் பாதியிலேயே வெளியேறுவது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. மேலும் இந்த என்சிஏவுக்கு சென்று குணமடையும் வேலைகளில் ஈடுபடுவார் என்றும் அதைத் தொடர்ந்து உள்ளூர் தொடர்களில் விளையாடி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முயற்சிப்பார் என்றும் குறைப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை