வீடியோ : வெளிநாடு சென்றாலும் தீராத பிரச்சனை – வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த பிரிதிவி ஷா.

ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். ஏனென்றால் தற்போது கலக்கி வரும் சுப்மன் கில் மற்றும் இ

By ·

ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். ஏனென்றால் தற்போது கலக்கி வரும் சுப்மன் கில் மற்றும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத பிரதிவ் ஷா இருவரும் U19 ஒரே அணியில் தான் இருந்தார்கள்.

U19 உலகக்கோப்பையில் நிசிலாந்து அணியை வீழ்த்திய பிறகு ஆஸ்திரேலியாவை பைனலில் வீழ்த்தியது அந்த அணி. மேலும் அந்த அணிக்கு பிரதிவ் ஷா கேப்டனாகவும், கில் மேன் ஆஃப் தி டோர்னமெண்ட்டாகவும் இருந்தார். இதனால் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றார் கூறப்பட்டது. அதே போன்று ஷா இந்திய அணியில் 2018ஆம் ஆண்டு இணைந்தார். இவருடைய பேட்டிங்கை பார்த்து அடுத்த சச்சின் டெண்டுல்கர் இவர் தான் என்று பலர் கூறினார்.

ஆனால் வெஸ்ட் இன்டிங்ஸ்க்கு எதிரான போட்டிக்கு பிறகு அவருடைய கிரிக்கெட் வாழ்ககை தலைகீழாக மாறி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பிரித்வி ஷா 8 போட்டிகளில் வெறும் 116 ரன்கள் தான் அடித்திருந்தார். அவருடைய பிரச்சினையே அவரினால் வேகமும், ஸ்விங்கும் தான். அதனை பயன்படுத்தி இவரை தொடக்கத்திலேயே அணிகள் ஆட்டமிழக்க செய்து விடுகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடரில் நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி கவுண்டி தொடரில் முதல் முறையாக தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கி 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தையும் பெற்றார். ஆனால் வேன் மீக்கர் எனும் நெதர்லாந்து பவுலர் வீசிய ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்தை வீச அதை அடிக்க முடியாமல் தடுமாறிய கீழே விழுந்தார்.

ஆனால் அவர் அப்படி விழும் போது ஸ்டம்ப் மீது மோதியதால் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார் ப்ரித்வி ஷ. இதனால அதிருப்தி அடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தார் பின்னர் அதிருப்தியுடன் எழுந்து பெவிலியன் திரும்பினார். இப்படி ஆட்டமிழக்கும் போது அணிக்கு 54/5 என தடுமாறி கொண்டிருந்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய அவர் இப்படி தடுமாறி ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இதனால் ஏமாற்றமடையும் இந்திய ரசிகர்கள் பலரும் இன்னும் அவர் நீங்கள் முழுமையானஃபார்முக்கு வரவில்லை, பயிற்சி அதிகம் எடுக்க வேண்டும் என்று விமர்சித்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோ பதிவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஒரு காலத்தில் அடுத்த சச்சினாக வருவார் என்று எதிர்பார்த்த பிரித்வ் ஷா தற்போது ரன் எடுக்கவே தடுமாறுவது ரசிகர்களுக்கு அதிர்ப்தியை கொடுத்துள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை