இறுதி போட்டிக்கு முன்னர் நமக்குத்தான் கோப்பை என்று நினைத்தேன் – இறுதி போட்டி குறித்து அஸ்வின்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை 2023 தொடரில் இந்திய அணியாது மிகவும் அற்புதமான விளையாட்டை விளையாடியது. ஆனால் துரதிஷ்ட வசமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி போட்டியில் இந்தியா பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை இன்று வரையில் எந்த இந்திய ரசிகர்களாலும் ஒப்புக்கொள்ள முடியவ

By ·

சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை 2023 தொடரில் இந்திய அணியாது மிகவும் அற்புதமான விளையாட்டை விளையாடியது. ஆனால் துரதிஷ்ட வசமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி போட்டியில் இந்தியா பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை இன்று வரையில் எந்த இந்திய ரசிகர்களாலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இருந்த போதிலும் இந்திய அணியாது இந்த உலக கோப்பை தொடரில் அற்புதமான விளையாட்டை விளையாடியதை யாராலும் மறுக்க முடியாது.

மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் இருவரும் அற்புதமாக இந்திய அணியை வழிநடத்தினார். மேலும் இறுதி போட்டியில் கூட இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை ரோஹித் சர்மா கொடுத்தார். இருந்த போதிலும் அவர் இனமும் கொஞ்சம் நிதானமாக ஆகியிருக்கலாம் என்று பலரும் விமர்சனம் செய்யும் நிலையில் தான் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து கூறியுள்ளார்.

அவர் பேசுகையில் “ரோஹித் சர்மாவுக்கு சதம் அடிக்க கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம்தான் முக்கியம். இறுதிப் போட்டியில் மிக முக்கியமான நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட் விழுந்தது இந்தியாவின் பெரும் பின்னடைவுக்கு முக்கிய காரணமானது.

இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் ஸ்ரேயாஸ் ஐயர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அடித்து துவம்சம் செய்தார். ஆனால் அந்த விஷயம் இறுதிப் போட்டியில் நடக்காமல் போனது. அவர் புல் ஷாட்டை மாஸ்டர் செய்வதாக சபதம் எடுத்தார், எண்ணற்ற பந்துகளை எதிர்கொண்டு அதில் அவர் திறமையாகவும் விளையாடினார். ஆனால் சில முறை முறை அவுட்டும் ஆனார். இருந்த போதிலும் அவர் அடித்த ஷார்ட் பந்துகளின் பல பவுண்டருளுக்கு சென்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலக கோப்பை தொடரானது எவ்வாறு சென்றது என்பதைப் பற்றி சிந்திக்க எனக்கு ஓரிரு நாட்கள் ஆனது. இறுதிப் போட்டிக்கு முன் இந்த உலக கோப்பை போட்டியில் நாம் தான் வெற்றியாளர்கள் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் போட்டி முடிந்ததும், உணர்ச்சி சற்று தட்டையானது. அந்த விஷயமானது வீரர்களை இரவு தூக்கத்தில் இருந்து எழுப்பி காயப்படுத்துகிறது.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியாது ஒரு அற்புதமான பிராண்ட் விளையாடியது. நாங்கள் சிறப்பாக விளையாடினோம், அதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் எடுத்த முயற்சி, அவர்களின் திட்டவட்டமான சிந்தனை மற்றும் தந்திரமாக யோசித்து செயல்பட்டதுதான் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை